ஆஃப்கானிஸ்தன் டி20 அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்ற ரஷித் கான்!
2021 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ள பி பிரிவில் ஆஃப்கானிஸ்தான் இடம்பெற்றுள்ளது. தகுதிச் சுற்றின் அடிப்படையில் மேற்கொண்டு இரண்டு அணிகள் இந்தப் பிரிவில் இடம்பெறவுள்ளன.
இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக நஜிபுல்லா ஸத்ரான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி டி20 தரவரிசையில் ரஷித் கான் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரது அனுபவத்தைக் கருத்தில்கொண்டு டி20 உலகக்கோப்பைக்கு முன்பு அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பின் ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளுக்கான கேப்டனாகவும் ரஷீத் கான் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அதன்பின் ரஷித் கதாமக முன்வந்து கேப்டன்சி வேண்டமென கூறியது குறிப்பிடத்தக்கது