ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் ரஷித் கானிற்கு இடம்!

Updated: Mon, Dec 16 2024 13:02 IST
Image Source: Google

ஆஃப்கானிஸ்தான் அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்திவுள்ளது. 

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது டிசம்பர் 15ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. அதன்பின் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது டிசம்பர் 26ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது. அதிலும் குறிப்பாக இவ்விரு அணிகளுக்கும் இடையே முதல் முறையாக பாக்ஸிங் டே மற்றும் புத்தாண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் ஜிம்பாப்வே தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெஸ்ட் தொடருக்கான ஆஃப்கனிஸ்தான் அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான இந்த ஆஃப்கானிஸ்தான் அணியில் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். 

இவர் கடைசியா 2021ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரஷித் கான் அதன்பின் காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்த அவர், ஆஃப்கனிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம்பிடித்த நிலையில் தற்சமயம் டெஸ்ட் அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். 

மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணியில் 7 அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆல்ரவுண்டர் இஸ்மத் ஆலம், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜாஹிர் ஷெஹ்சாத் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் பஷீர் அகமது ஆப்கான் உள்ளிட்டோர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயலபட்டதன் காரணமாக முதல் முறையாக ஆஃப்கானிஸ்தான் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். .

இவர்களைத் தவிர்த்து ஆஃப்கானிஸ்தான் ஒருநாள், டி20 அணிகளில் விளையாடியுள்ள அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஃபரீத் அஹ்மத், ரியாஸ் ஹாசன் மற்றும் செதிகுல்லா அடல் உள்ளிட்டோர் தற்சயம் டெஸ்ட் அணியிலும் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர்த்து ரஹ்மத் ஷா, இக்ராம் அலிகைல், அப்துல் மாலிக் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இந்த டெஸ்ட் அணியில் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர்.  

Also Read: Funding To Save Test Cricket

ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணி: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மத் ஷா (துணை கேப்டன்), இக்ராம் அலிகைல், அஃப்சர் ஜசாய், ரியாஸ் ஹசன், செதிகுல்லா அடல், அப்துல் மாலிக், பஹிர் ஷா, இஸ்மத் ஆலம், அஸ்மத்துல்லா உமர்சாய், ஜாஹிர் கான், ஜியா உர் ரஹ்மான், ஜாஹிர் ஷெஹ்சாத், ரஷித் கான், யாமின் அஹ்மத்சாய், பஷீர் அஹ்மத், நவீத் சத்ரான், ஃபரீத் அஹ்மத்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை