டிம் சௌதியின் சாதனையை முறியடித்த ரஷித் கான்!

Updated: Wed, Aug 31 2022 11:02 IST
Rashid Surpasses Southee To Become 2nd-Highest Wicket-Taker In T20Is (Image Source: Google)

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்தார். மொசாடெக் உசைன் 30 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 48 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். மஹ்முதுல்லா 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தான் சார்பில் முஜிபுர் ரஹமான், ரஷித் கான் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கர்பாஸ் 11 ரன்னிலும், ஸஸாய் 23 ரன்னிலும், கேப்டன் முகமது நபி 8 ரன்னிலும் அவுட்டாகினர். இப்ராகிம் ஸத்ரான் நிதானமாக விளையாடினர். அவருடன் ஜோடி சேர்ந்த நஜிபுல்லா சட்ரான் அதிரடியாக ஆடி 17 பந்தில் 6 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 43 ரன்கள் குவித்தார்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் சூப்பர் 4 சுற்றுக்குள் ஆப்கானிஸ்தான் நுழைந்தது. ஆட்ட நாயகன் விருது முஜிபுர் ரஹ்மானுக்கு அளிக்கப்பட்டது.

இப்போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ரஷித் கான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் எனும் நியூசிலாந்தின் டிம் சௌதியின் சாதனையை முறியடித்துள்ளார்.

இப்போட்டியளில் வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 122 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், ரஷித் கான் 115 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தையும், டிம் சௌதி 114 விக்கெட்டுகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை