உண்மையை நாம் சத்தமாகவும் தெளிவாகவும் சொல்லியே ஆக வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!

Updated: Mon, Jul 03 2023 13:58 IST
Image Source: Google

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் கடந்த ஜூன் 28ஆம் தேதி தொடங்கியது. போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனவுடன் 91 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 279 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மொத்தம் 370 ரன்கள் முன்னிலை பெற்றது.

இங்கிலாந்து அணி 371 ரன்கள் இலக்கை துரத்தியபோது பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள், பென் டக்கட் 83 ரன்கள் அடித்து போராடினர். மற்ற வீரர்கள் எவரும் பங்களிப்பை கொடுக்காததால் 327 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 193 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்திருந்த போது பேர்ஸ்டோவ் மற்றும் பென்ஸ் ஸ்டோக்ஸ் இருவரும் களத்தில் இருந்தனர். 

இவர்களின் பாட்னர்ஷிப் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இதை உடைத்துவிட்டால் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்து விடும் என்று ஆஸ்திரேலியா அணி போராடியது. அப்போது 51ஆவது ஓவரின் கடைசி பந்தில் பேர்ஸ்டோவுக்கு ஷார்ட் பால் வீசப்பட்டது. அதனை பேர்ஸ்டோவ் அடிக்க முயற்சிக்காமல் குனிந்து கொண்டார். இதையடுத்து பந்து விக்கெட் கீப்பரிடம் சென்றபோது, அவர் கிரீசை விட்டு வெளியே வந்தார். இதை பார்த்த அலெக்ஸ் கேரி பந்தை ஸ்டம்பில் அடித்து ரன் அவுட் செய்தார். 

இதனையடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் நடுவரிடம் அவுட் என்று முறையிட, மூன்றாம் நடுவரின் முடிவுக்கு தீர்ப்பு கொண்டு செல்லப்பட்டது. இதன்பின்னர் மூன்றாம் நடுவர், அவுட் என்று முடிவை அறிவிக்க, இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய வீரர் அஸ்வின் ஐபிஎல்லில் இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் விக்கெட்டினை ரன் அவுட் செய்வார். அதை மன்கட் என முன்பு அழைத்து வந்தனர். பௌலர் பந்தினை போடும்முன் பேட்டர் கிரீஸை விட்டு வெளியேறினால் பௌலர்கள் ஸ்டம்பினை அடித்து அவுட் ஆக்கலாம். இதனை எம்சிசியும் தனது விதிமுறைகளில் உட்புகுத்தி அதனை ரன் அவுட் என்றும் பெயர் மாற்றியது. தற்போது உலக அளவில் பலரும் இதை செய்து வருகின்றனர். 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை