ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கோட்டைவிட வேண்டாம் - ரவி சாஸ்திரி!

Updated: Fri, May 26 2023 12:09 IST
Ravi Shastri drops a shocking remark ahead of the WTC final! (Image Source: Google)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் தொடர்கள் முடிவடைந்து வெற்றி சதவீதம் அடிப்படையில் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இரு அணிகளும் முதல் இரண்டு இடங்களை பிடித்தன. இதன் மூலம் இரு அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற்றனர். வருகிற ஜூன் 7 முதல் 11ஆம் தேதி வரை இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகளின் வீரர்கள் பட்டியலும் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு விட்டது.

இந்திய அணியை பொறுத்தவரை பும்ரா, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்றோர் காயம் காரணமாக இடம்பெறவில்லை. அவர்களுக்கு மாற்று வீரர்களும் அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் இந்திய அணி சற்று பின்னடைவை சந்திக்குமோ என்கிற பரவலான கருத்துக்களும் நிலவி வருகின்றன. இந்நிலையில் இந்திய அணிக்கு இப்படி ஒரு சவால் இருக்கிறது. அதை நேர்த்தியாக கையாள வேண்டும், ரோஹித் சர்மா சுதாரித்து செயல்பட வேண்டும் என்று ரவி சாஸ்திரி எச்சரித்துள்ளார் .

இதுகுறித்து பேசிய அவர், “கடந்த முறை இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டார்கள். அப்போது பும்ரா, முகமது சமி, சிராஜ் மற்றும் சர்துல் தாக்கூர் ஆகியோர் இருந்தனர். இப்போது பும்ரா இல்லை. ஆகையால் வேகப்பந்து வீச்சாளர்களை சரியாக கையாள வேண்டும். மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் பார்த்துக்கொள்வர் என்றாலும், அவர்களுக்கு வயதாகிவிட்டது மேலும் பந்துவீச்சு துரிதம் இருக்காது என்று உணரும் பட்சத்தில் அதற்கேற்றவாறு ரோகித் சர்மா திட்டமிட்டு கையாள வேண்டும்.

அதேபோல் ஜூன் மாதம் நடைபெறுகிறது. இங்கிலாந்தில் வானிலை ஜூன் மாதம் மழைபொழிவு இருக்கும். வானிலை மாறாமல் பிட்ச் வறட்சியாக இருக்கும் பட்சத்தில் சுழல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தலாம். அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் அந்த இடத்திற்கு சரியாக இருப்பர். ஒருவேளை வானிலை மாறும் பட்சத்தில் ஸ்பின்னர்கள் சரியாக எடுபடாமல் போகலாம். அதையும் ரோகித் சர்மா கையாள வேண்டும். ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்துவது அவசியம் என்றாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்த திட்டமிடலும் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை