சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!

Updated: Wed, Sep 18 2024 10:46 IST
Image Source: Google

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளி (செப்டம்பர் 19) தொடங்குகிறது. இப்போட்டிக்கான இரு அணி வீரர்களையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. மேற்கொண்டு இரு அணி வீரர்கள் தற்சமயம் சென்னையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்காக புதிய மைல் கல் ஒன்றை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி இந்த டெஸ்ட் தொடரில் ஜடேஜா மேற்கொண்டு 6 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில், இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்களை குவித்த மூன்றாவது வீரர் எனும் பெருமைப் பெறவுள்ளார். 

இதுவரை இந்திய அணிக்காக 72 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரவீந்திர ஜடேஜா, பேட்டிங்கில் 3,036 ரன்களையும், பந்துவீச்சில் 294 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர். முன்னதாக இந்திய அணியைச் சேர்ந்த கபில் தேவ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த மைல் கல்லை எட்டிய இந்திய வீரர்கள் எனும் பெருமையை தங்கள் வசம் வைத்துள்ளனர். 

அதன்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இந்திய அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 5,248 ரன்களையும், பந்துவீச்சில் 434 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். அவரைத் தொடர்ந்து தற்போதுள்ள அணியின் மற்றொரு நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 100 போட்டிகளில் விளையாடி 3,309 ரன்களையும், 516 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இதுதவிர இந்த தொடரில் ரவீந்திர ஜடேஜா இந்த மைல் கல்லை எட்டும் பட்சத்தில் சர்வதேச அளவில் இந்த சாதனையை படைக்கும் 11ஆவது வீரர் எனும் பெருமையையும் பெருவார். இதற்கு முன்னர் கபில் தேவ், அஸ்வின் ஆகியோரைத் தவிர்த்து 8 வீரர்கள் மட்டுமே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த மைல் கல்லை எட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் & 3000 ரன்களை குவித்த வீரர்கள்

  • கபில் தேவ் (IND)
  • இயன் போத்தம் (ENG)
  • டேனியல் வெட்டோரி
  • இம்ரான் கான் (PAK)
  • ஷான் பொல்லாக் (SA)
  • ஸ்டூவர்ட் பிராட் (ENG)
  • ரவிச்சந்திரன் அஷ்வின் (IND)
  • ஷேன் வார்ன் (AUS)
  • ரிச்சர்ட் ஹாட்லீ (NZ) 
  • சமிந்த வாஸ் (SL)
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை