ஐபிஎல் 2025: வரலாற்று சாதனை படைக்க காத்திருக்கு ரவீந்திர ஜடேஜா!

Updated: Sat, Mar 22 2025 12:23 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்று முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இரண்டு அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டியானது நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்பதற்கான மும்பை இந்தியன்ஸ் அணியானது நேற்றைய தினம் சென்னை வந்தடைந்தது. மேற்கொண்டு இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதன் காரணமாக இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ஐபிஎல் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத ஒரு தனித்துவமான சாதனையைப் படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

அதன்படி இத்தொடரில் ரவீந்திர ஜடேஜா மேற்கொண்டு 41 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், ஐபிஎல் தொடரில் தனது 3000 ரன்களை பூர்த்தி செய்வார். இதனை செய்யும் பட்சத்தில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் 3ஆயிரம் ரன்கள் மற்றும் 150+ விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதுவரை 240 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2959 ரன்களையும், 184 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரவீந்திர ஜடேஜாவின் ஐபிஎல் வரலாறு குறித்து பேசியனால் 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, அவர் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகளுக்காகவும் விளையாடினார். அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் 12ஆவது சீசனை எதிர்நோக்கியுள்ளார் .

மேர்கொண்டு கடந்த 2022ஆம் ஆண்டுக்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ச் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகியதை அடுத்து ரவீந்திர ஜடேஜா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையில் சிஎஸ்கே அணி எட்டு போட்டிகளில் விளையாடிய நிலையில் அதில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.இதன் காரணமாக அத்தொடரின் பாதியிலேயே எம்எஸ் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதீஷா பதிரானா, நூர் அகமது, ரவிச்சந்திரன் அஸ்வின், டெவோன் கான்வே, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சாம் கரன், ஷேக் ரஷித், அன்ஷுல் கம்போஜ், முகேஷ் சௌத்ரி, தீபக் ஹூடா, குர்ஜன்பிரீத் சிங், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணன் கோஷ், ஸ்ரேயாஸ் கோபால், வான்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை