வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
Advertisement
டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் 28 புள்ளிகளை இழந்துள்ளார். இதன்மூலம், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 386 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 2017-க்குப் பிறகு ஜடேஜா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
அதேபோல் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் 18 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா ஒரு இடம் முன்னேறி 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.