விராட் கோலிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்; பயிற்சியை ரத்து செய்த ஆர்சிபி - தகவல்!

Updated: Wed, May 22 2024 15:57 IST
Image Source: Google

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல்  தொடரின் 17ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதுடன், நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

இதையடுத்து இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று, இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இதையடுத்து இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக விராட் கோலிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, ராயல் சேலஞ்சார்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சி மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு ஆகியவற்றை அந்த அணி நிர்வாகம் ரத்து செய்துளதாக தகவல் வெளியாகியுள்ளார். 

அதன்படி இன்றைய தினம் ஆர்சிபி அணியானது எலிமினேட்டர் சுற்றில் விளையாடவுள்ள நிலையில், இப்போட்டிக்கு தயாராகும் வகையில் அஹ்மதாபாத்தில் உள்ள குஜராத் கல்லுரி மைதானத்தில் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால் இன்றைய தினம் ஆர்சிபி அணி வீரர்கள் யாரும் பயிற்சிக்கு செல்லவில்லை. மேற்கொண்டு அந்த அணியின் செய்தியாளர்கள் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

முன்னதாக சில தினங்களுக்கு முன்னர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரை குஜராத் பயங்கரவாத தடுப்புப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரனையின் போது தான் விராட் கோலிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்ததையடுத்து, ஆர்சிபி அணி நிர்வாகம் இம்முடிவை எடுத்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை