WPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பலம், பலவீனம், டாப் வீராங்கனைகள் & போட்டி அட்டவணை!

Updated: Wed, Feb 21 2024 11:58 IST
WPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பலம், பலவீனம், டாப் வீராங்கனைகள் & போட்டி அட்டவணை! (Image Source: Google)

மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் பெங்களூர் மற்றும் டெல்லி என இரண்டு இடங்களில் நடக்கிறது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது கடந்த சீசனில் விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றியை மட்டுமே பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. இதனால் நடப்பு சீசனில் அந்த அணி தவறுகளை திருத்தி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. இந்நிலையில், நடப்பு சீசனில் விளையாடும் ஆர்சிபி அணியின் பலம், பவீனம், டாப் வீரர்கள் மற்றும் அணியின் அட்டவணையை இப்பதிவில் காண்போம்.

ஆர்சிபி அணியின் பலம் மற்றும் பலவீனம்

ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி நடப்பு சீசனில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக இருப்பதுடன் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. ஆடவர் அணிதான் விளையாடிய 16 ஐபிஎல் சீசன்களில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாம் இருந்து வரும் நிலையில், அந்த நிலையை மகளிர் அணி முறியடித்து புதிய சரித்திரம் படைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. அதற்கேற்றவாரே அந்த அணி நடப்பு சீசனில் வலிமையான பேட்டிங் மற்றும் பந்துவீச்சைக் கொண்டுள்ளதால் நிச்சயம் அந்த அணி பிற அணிகளுக்கு சவாலளிக்கும் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது. 

அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஸ்மிருதி மந்தனா, ஹீதர் நைட், சோஃபி டிவைன், ரிச்சா கோஷ், எல்லிஸ் பெர்ரி, ஜார்ஜியா வர்ஹாம், சோஃபி மொலினக்ஸ், நதின் டி கிளார்க் ஆகியோர் உள்ளனர். இதில் பெரும்பாலான வீராங்கனைகள் ஆல் ரவுண்டர்கள் என்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் பந்துவீச்சை போறுத்தவரையில் ரேனுகா சிங், கேட் கிராஸ், ஏக்தா பிஸ்ட், சிம்ரன் பஹதுர் ஆகியோரும் உள்ளனர். 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பலவீனன் என்று பார்த்தால் அந்த அணி வீராங்களை பெரும்பாலான போட்டிகளில் சோபிக்க தவறுவது மட்டும் தான். அதிலும் குறிப்பாக பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்படும் போட்டிகளில் பேட்டர்கள் தங்களது திறனை வெளிப்படுத்த தவறியுள்ளனர். அணியில் ஏராளமான நட்சத்திர வீராங்கனைகள் இருந்தும் அந்த அணியால் கடந்த சீசனில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. இதனால் கடந்த சீசனில் செய்த தவறுகளை திருத்தி ஆர்சிபி அணி இந்த சீசனில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

ஆஷா ஷோபனா, திஷா கசத், எல்லிஸ் பெர்ரி, ஹீதர் நைட், இந்திராணி ராய், கனிகா அஹுஜா, ரேணுகா சிங், ரிச்சா கோஷ், ஸ்ரேயங்கா பாட்டீல், ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), சோஃபி டிவைன், ஜார்ஜியா வேர்ஹாம், கேட் கிராஸ், ஏக்தா பிஷ்ட், சுபா சதீஷ், எஸ் மேகனா, சிம்ரன் பஹதூர், சோஃபி மோலினக்ஸ்.

டாப் பேட்டர்கள்

  • சோஃபி டிவைன் - 8 போட்டிகளில் 266 ரன்கள்
  • எலிஸ் பெர்ரி - 8 போட்டிகளில் 253 ரன்கள்
  • ஸ்மிருதி மந்தனா - 8 போட்டிகளில் 149 ரன்கள்
  • ரிச்சா கோஷ் - 8 போட்டிகளில் 138 ரன்கள்
  • ஹீதர் நைட் - 8 போட்டிகளில் 135 ரன்கள்

டாப் பந்துவீச்சாளர்கள்

  • ஸ்ரேயங்கா பாட்டீல் - 7 ஆட்டங்களில் 6 விக்கெட்டுகள்
  • சோபனா ஆஷா - 5 ஆட்டங்களில் 5 விக்கெட்டுகள்
  • ஹீதர் நைட் - 8 ஆட்டங்களில் 4 விக்கெட்டுகள்
  • எலிஸ் பெர்ரி - 8 ஆட்டங்களில் 4 விக்கெட்டுகள்
  • மேகன் ஷட் - 7 ஆட்டங்களில் 4 விக்கெட்டுகள்

ஆர்சிபி போட்டி அட்டவணை

  • பிப்ரவரி 24: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs யுபி வாரியர்ஸ், எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • பிப்ரவரி 27: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் ஜெயண்ட்ஸ், எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • பிப்ரவரி 29: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ், எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • மார்ச் 2: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ், எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • மார்ச் 4: யுபி வாரியர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • மார்ச் 6: குஜராத் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • மார்ச் 10: டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • மார்ச் 12: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை