Advertisement
Advertisement

Mike hesson

யுஸ்வேந்திர சஹாலை ஏலத்தில் எடுக்காததற்கான காரணத்தை கூறிய மைக் ஹெசன்!
Image Source: Google

யுஸ்வேந்திர சஹாலை ஏலத்தில் எடுக்காததற்கான காரணத்தை கூறிய மைக் ஹெசன்!

By Bharathi Kannan February 20, 2024 • 15:05 PM View: 117

இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்தவர் யுஸ்வேந்திர சஹால். மேலும் ஐபிஎல் தொடரிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலமாக இவர் இந்திய அணியில் தனது இடத்தைப் பிடித்தார். அதன்படி, ஆரம்ப காலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய யுஸ்வேந்திர சஹால், அதன்பின் கடந்த 2014ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டு கடந்த 2021ஆம் ஆண்டு வரை விளையாடி வந்தார்.

இதில் ஆர்சிபி அணிக்காக 114 போட்டிகளில் விளையாடிய சஹால், 139 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை இந்நாள் வரை வைத்துள்ளார். ஆனால் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் ஆர்சிபி அணியானது யுஸ்வேந்திர சஹாலை தக்கவைக்காமல் அணியிலிருந்து விடுவித்தது. 

Related Cricket News on Mike hesson