ஐபிஎல் 2025: மயங்க் யாதவை ஒப்பந்தம் செய்தது ஆர்சிபி!

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக ஐபிஎல் தொடரில் இதுவரை சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரஜத் படிதர் தலைமையில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து அசத்தி வருகிறது. அந்தவகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணியானது 8 வெற்றி மூன்று தோல்கள் என 16 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதனால் எஞ்சியுள்ள போட்டிகளில் ஏதெனும் ஒன்றில் ஆர்சிபி அணி வெற்றிபெற்றால் கூட நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இதன் காரணமாக அந்த அணி தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் ஆர்சிபி அணி தரப்பில் இருந்து இன்று முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகிவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்த தேவ்தத் படிக்கல் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்த தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடிய தேவ்தத் படிக்கல் இரண்டு அரைசதங்களுடன் 247 ரன்களைக் குவித்திருந்தார். மேலும் இக்கட்டான சூழ்நிலைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியிலும் பங்களிப்பு செய்துள்ளார். இந்நிலையில் படிக்கல் தொடரில் இருந்து விலகியதை அடுத்த இந்திய வீரர் மயங்க் யாதவ்வை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இதுவரை 127 போட்டிகளில் 121 இன்னிங்ஸ்களில் விளையாடிவுள்ள மயங்க் அகர்வால், ஒரு சதம் 13 அரைசதங்களுடன் 2661 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் கடந்த சீசனில் சன்ரைசர்ஸை ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அவர் இந்த சீசனுக்கு முன் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்ற அவரை எந்த அணியும் ஏலம் எடுப்பதற்கு முன் வராத காரணத்தால் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில் தான் தேவ்தத் படிக்கல் காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியதை அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மயங்க் அகர்வாலை ரூ.1 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கெனவே ஆர்சிபி அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அவர்களுடன் மயன்க் அகர்வாலும் இணைந்துள்ளது அணிக்கு மேலும் பலத்தை கூட்டியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
Also Read: LIVE Cricket Score
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ரஜத் பட்டிதார் (கேப்டன்), யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ரசிக் தார், சுயாஷ் சர்மா, குர்னால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, மனோஜ் பந்தேஜ், ஜேக்கப் பெத்தேல், மயங்க் அகர்வால்*, ஸ்வஸ்திக் சிகாரா, லுங்கி இங்கிடி, அபிநந்தன் சிங், மோஹித் ரதி