ஐபிஎல் 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது வீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு நடைபெறும் 5ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ்
- இடம் - சின்னசாமி கிரிக்கெட் மைதானம், பெங்களூரு
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
கடந்த சீசனில் இரு அணிகளும் ஒரு முறை மட்டுமே நேருக்கு நேர் மோதிக்கொண்ட நிலையில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. கடந்த சீசனை மறக்க வேண்டிய அளவில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. தனது முதல் ஐபிஎல் டைட்டிலுக்காக 15 ஆண்டுகளாக போராடி வரும் ஆர்சிபி அணி, இந்த முறை அதற்கான பயணத்தை உள்ளூர் மைதானமான சின்னசாமி மைதானத்தில் இருந்து தொடங்குகிறது.
கடந்த மூன்று சீசன்களாக ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் தகுதி பெற்றபோதிலும், இறுதிக்கு முன்னேற முடியாமல் பரிதாபமாக வெளியேறி வருகிறது. இந்த முறை ஆர்சிபி விளையாட இருக்கும் முதல் 8 போட்டிகளில் 6 போட்டிகள் உள்ளூர் மைதானத்திலேயே நடைபெற இருக்கிறது. ஆனால் உள்ளூர் மைதானத்தில் அதிக வெற்றிகளை குவிக்காத அணி என்கிற மோசமான சாதனையை தன் வசம் வைத்துள்ள ஆர்சிபி அணி.
ஆட்டம் சிறப்பாக இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாத அணியாகவே இருந்து வரும் ஆர்சிபி இந்த முறை அதை மாற்றி அமைக்குமா என ரசிகர்களை வழக்கம்போல் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் ஆர்சிபி அணியின் முக்கிய வீரர்காளவும், கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டவர்களுமான ஹசரங்கா, டி சில்வா, ராஜத் பட்டிதார், ஜோஷ் ஹசில்வுட் ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார்கள். ஹசரங்கா நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்ந்து முடிந்தவுடன் அணியில் இணைவார் என தெரிகிறது.
ஆனால் பட்டிதார் காயமடைந்துள்ள நிலையில் அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். ஹசில்வுட் புத்துணர்வு முகாமில் இருந்து வரும் நிலையில், ஏப்ரல் 13ஆம் தேதிக்கு பிறகு அணியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விராட் கோலி, மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், முகமது சிராஜ், ரீஸ் டாப்லி ஆகியோர் இருப்பது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
மும்பை அணியிலும் ஆர்சிபி போல் முக்கிய வீரர்களான ஜஸ்ப்ரீத் பும்ரா, ஜேய் ரிச்சட்ர்சன் ஆகியோர் காயத்தால் தொடரிலிருந்து விலகியுள்ளனர். இருப்பினும் வேகப்பந்து வீச்சை வலுப்படுத்தும் விதமாக ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் உள்ளனர். இவர்களுக்கு கை கொடுக்கும் விதமாக தமிழ்நாடு அணியை சேர்ந்த சந்தீப் வாரியரும், பும்ராவுக்கு மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த சீசனில் பெற்ற மோசமான தோல்வியை மறக்கடிக்கும் விதமாக பழைய பாணியில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக மாறுவதற்கான அனைத்து வித முயற்சிகளையும் மும்பை அணி மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், டெவால்ட் ப்ரீவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கேமரூன் க்ரீன் என நட்சத்திர வீரர்கள் இருப்பதும் பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் -30
- ஆர்சிபி - 13
- மும்பை இந்தியன்ஸ் - 17
உத்தேச லெவன்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ - ஃபாஃப் டு பிளெஸிஸ் (கே), ஃபின் ஆலன், விராட் கோலி, மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், டேவிட் வில்லி, ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், ரீஸ் டாப்லி, முகமது சிராஜ், கர்ன் ஷர்மா
மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா (கே), கேமரூன் கிரீன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், ஹிருத்திக் ஷோக்கீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷம்ஸ் முலானி, பியூஷ் சாவ்லா / குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள் - இஷான் கிஷன், ஃபின் ஆலன்
- பேட்டர்ஸ் - விராட் கோலி, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஃபாஃப் டு பிளெசிஸ்
- ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன்
- பந்துவீச்சாளர்கள் - ஜோஃப்ரா ஆர்ச்சர், முகமது சிராஜ், ரீஸ் டாப்லி
கேப்டன்/ துணைக்கேப்டன் - விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன்