மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரேணுகா சிங்!
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று (டிசம்பர் 22) வதோதராவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய இந்திய அணி ஸ்மிருதி மந்தனாவின் அசத்தலான ஆட்டத்தால் 9 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் எடுத்தது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 91 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து, பிரதிகா ராவல் 40 ரன்கள், ஹர்லீன் தியோல் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஸைதா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஹீலி மேத்யூஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீராங்கனிகள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 26.2 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக எஃபி பிளெட்சர் அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளை கைப்பற்று அசத்தினார்.
இதன் மூலம், இந்திய அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மேற்கொண்டு இப்போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய ரேணுகா சிங் இப்போட்டியின் ஆட்டநாயகி விருதினை வென்றார். அத்துடன் இப்போட்டியில் ரேணுகா சிங் ஒரு சாதனையையும் படைத்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்படி, இப்போட்டியில் ரேணுகா சிங் 10 ஓவர்களில் 29 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒருநாள் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது இந்திய வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றார். இதற்கு முன் பூர்ணிமா சவுத்ரி, மம்தா மாபென் மற்றும் ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.