ஐபிஎல் 2022: லக்னோவுக்கு கேஎல் ராகுல்; அகமதாபாத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர்!

Updated: Thu, Dec 16 2021 20:47 IST
Image Source: Google

ஐபிஎல்லில் 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 15ஆவது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் கூடுதலாக ஆடவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.

அனைத்து அணிகளும் தலா 4 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும். புதிய அணிகள் ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து விலகிய டேவிட் வார்னர் உட்பட பல பெரிய வீரர்கள் இந்த மெகா ஏலத்தில் இடம்பெறவுள்ளதால், இந்த மெகா ஏலம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்த வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தன. இந்நிலையில் அகமதாபாத், லக்னோ அணிகள் இன்னும் தாங்களது வீரர்கள் குறித்த அறிவிப்பு ஏதையும் வெளியிடவில்லை. 

இதற்கிடையில் லக்னோ அணி கேப்டனாக கேஎல் ராகுலையும், ரஷித் கான், இஷான் கிஷான் ஆகியோரை வீரர்களாகவும் தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் அகமதாபாத் அணி கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரையும், வீரர்களாக ஹர்திக் பாண்டியா, டேவிட் வார்னர் ஆகியோரையும் தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷாருக் கான், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்க ஆயத்தமாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து ரசிகர்கள் பெரும் ஆவலோடு அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை