அனைத்து வீரர்களையும் வெளியேற்றும் பஞ்சாப் கிங்ஸ் - தகவல்!

Updated: Sat, Nov 27 2021 17:03 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதனை தொடர்ந்து 15ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி துவங்க இருக்கிறது என்ற தகவல் வெளியானது.

மேலும் அடுத்த ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் எழுத்துவங்கியுள்ளது. ஏனெனில் அடுத்த ஆண்டு ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக இரண்டு அணிகள் சேர்ந்து 10 அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெற இருப்பதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்துள்ளது.

அடுத்த ஆண்டு 10 அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெற இருப்பதனால் தற்போது உள்ள 8 அணிகளிலும் நான்கு வீரர்களை மட்டும் தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்தில் விடப்பட இருக்கிறார்கள். இதன் காரணமாக தற்போது ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்க இருக்கும் நான்கு வீரர்கள் பற்றியே யோசித்துக் கொண்டு இருக்கின்றன.

அதுமட்டுமின்றி வரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதன்காரணமாக தற்போது முழுவீச்சில் ஒவ்வொரு அணியும் தங்களது அணி வீரர்கள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். அடுத்த ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பல முக்கியமான வீரர்கள் ஏலத்திற்கு செல்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களது அணியில் எந்த ஒரு வீரரையும் தக்க வைக்க விரும்பவில்லை என்றும், அனைத்து வீரர்களையும் ஏலத்தில் விட்டு புதிய வீரர்களை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஏனெனில் கடைசி சில ஆண்டுகளாகவே சிறப்பான வீரர்கள் அணியில் இடம் பெற்றிருந்தாலும் தொடர்ச்சியான தோல்விகளால் துவண்டு உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி அனைத்து வீரர்களையும் வெளியேற்றிவிட்டு புதியதாக அணியை கட்டமைக்க விரும்புவதாக கூறப்படுகிறது.

அதன்படி எந்த ஒரு வீரரையும் ரீடெயின் செய்யாமல் அனைத்து வீரர்களையும் ஏலத்தில் விட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி அனைத்து வீரர்களையும் களைத்து முழு அணியாக மாற்றும் ஒரே அணி பஞ்சாப் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை