ரெஸ்ட் ஆஃப் இந்திய அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம்; தமிழக வீரருக்கு வாய்ப்பு!

Updated: Mon, Feb 27 2023 11:54 IST
Image Source: Google

கடந்த 2020-21ஆம் ஆண்டில் ரஞ்சி கோப்பையை வென்ற மத்தியப் பிரதேச அணிக்கும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்குமான இரானி கோப்பைக்கான ஆட்டம் குவாலியர் நகரில் மார்ச் 1 அன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இந்திய அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் மயங்க் அகவர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் நட்சத்திர வீரர் சர்ஃபராஸ் கானுக்கு விரலில் காயமடைந்ததால் அவருக்குப் பதிலாக பாபா இந்திரஜித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்கிற கூடுதல் தகவலும் பிசிசிஐயின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த அணியில் அபிமன்யு ஈஸ்வரன், யாஷ் துல், முகேஷ் குமார், சேத்தன் சகாரியா, மயங்க் மார்கண்டே, சௌரப் குமார் உள்ளிட்ட 16 பேர் கொனட் ரெஸ்ட் ஆஃப் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி: மயங்க் அகர்வால் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், ஜெயிஸ்வால், யாஷ் துல், பாபா இந்திரஜித், உபேந்திர யாதவ் (விக்கெட் கீப்பர்), அஜித் சேத், செளரப் குமார், ஹர்விக் தேசாய், நவ்தீப் சைனி, முகேஷ் குமார், சேதன் சகாரியா, ஆகாஷ் தீப், மயங்க் மார்கண்டே, புல்கித் நரங், சுதீப் குமார்  கராமி. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை