நான் விளையாடியதில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் இது - ஒல்லி போப்!

Updated: Sun, Jan 28 2024 22:09 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 436 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது நிலையில், 190 ரன்கள் முன்னிலையும் பெற்றது. 

இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஒல்லி போப் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய 196 ரன்களைச் சேர்த்ததன் மூலம் அந்த அணி 420 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணிக்கு 231 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களுகே ஆல் அவுட்டானது.

இதன்மூலம் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்த ஒல்லி போப் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்ப்பட்டார். இந்நிலையில், எனது அறுவை சிகிச்சைக்கு பின் இத்தொடருக்காக நீண்ட காலமாக நான் தயாராகி வந்தேன் என்று ஒல்லி போப் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “நான் விளையாடிய இந்த இன்னிங்ஸ் 100 சதவீதம் என்னுடைய சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. இந்தியாவில் உள்ள மைதானங்கள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சவாலான ஒன்றாகவே உள்ளது.  நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்துள்ள நான்கு சதங்களை விட இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடக்குவதற்கு உதவிய இந்த சதம் மிகச்சிறந்த ஒன்றாக நான் கருதுகிறேன். இரண்டாவது இன்னிங்ஸில் எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தந்து. 

நான் இந்த இன்னிங்ஸில் அடித்த ஒருசி கேட்ச்சுகளை இந்திய வீரர்கள் தவறவிட்டனர்.  அதிலும் எனக்கு விடப்பட்ட முதல் கேட்சானது நான் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்த அதே ஸ்லீப் திசையில் சென்றது. அதனால் நான் இன்சைட் எட்ஜ் ஆவதில் இருந்து என்னை தற்காத்துக்கொண்டேன். மேலும் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப்பில் விளையாட நான் என் மனநிலையை மாற்றிக்கொண்டேன். 

இந்த தொடருக்காக நான் எனது வழக்கமான அணுகுமுறையில் இருந்து சில மாற்றங்களை செய்துள்ளேன். மேலும் எனது தோள்பட்டை அறுவை சிகிச்சை முடிந்து கிடைத்த நேரத்தில் இத்தொடருக்காக நீண்ட காலமாக நான் தயாராகி வந்துள்ளேன். அதில் எனது ஆட்ட அணுகுமுறையில் சில மாற்றங்களை செய்துள்ளேன்.  அது தற்போது எனக்கு மிகவும் உதவியாக அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை