சிறந்த வீராங்கனைகள் கொண்டு ஐசிசி உருவாக்கிய டி20 உலகக்கோப்பை அணி; ரிச்சா கோஷுக்கு இடம்!

Updated: Mon, Feb 27 2023 17:47 IST
Richa Ghosh Lone Indian Player In 2023 ICC Women's T20 World Cup Team Of The Tournament (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 8ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இறுதி ஆட்டத்தில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்துத் தோற்றது. 

இது டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்குக் கிடைத்த 6ஆவது சாம்பியன் பட்டமாகும். கடந்த 2018, 2020ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரிலும்  வாகை சூடிய ஆஸ்திரேலியா, தொடர்ந்து 3ஆவது முறையாக (ஹாட்ரிக்) தற்போதும் கோப்பையை வென்றிருக்கிறது. அந்த அணி இவ்வாறு ஹாட்ரிக் கோப்பை வெல்வது இது 2ஆவது முறையாகும். 

இதற்கு முன் 2010, 2012, 2014 ஆகிய ஆண்டுகளிலும் அந்த அணி தொடர்ந்து சாம்பியனானது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லேனிங், 2014, 2018, 2020, 2023 ஆகிய ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையையும் 2022 ஒருநாள் உலகக் கோப்பையையும் வென்று அதிக ஐசிசி பட்டங்களை (5) வென்ற கேப்டன் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். அடுத்த இடங்களில் 4 ஐசிசி கோப்பைகளுடன் ரிக்கி பாண்டிங்கும் 3 ஐசிசி கோப்பைகளுடன் தோனியும் உள்ளார்கள்.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளைக் கொண்டு ஓர் அணியை அறிவித்துள்ளது ஐசிசி. இந்த அணியின் கேப்டனாக இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் இருந்து ரிச்சா கோஷுக்கு மட்டும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளார். 

ஐசிசி டி20 உலகக்கோப்பை அணி: டாஸ்மின் பிரிட்ஸ் (தென் ஆப்பிரிக்கா), அலிசா ஹீலி (வாரம்), லாரா வோல்வார்ட் (தென் ஆப்பிரிக்கா), நாட் ஸ்கிவர்-ப்ரன்ட் (கே) (இங்கிலாந்து), ஆஷ்லே கார்ட்னர் (ஆஸ்திரேலியா), ரிச்சா கோஷ் (இந்தியா), சோஃபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து), கரிஷ்மா ராம்ஹராக், ஷப்னிம் இஸ்மாயில் (தென் ஆப்ரிக்கா), டார்சி பிரவுன் (ஆஸ்திரேலியா), மேகன் ஷட் (ஆஸ்திரேலியா) மற்றும்  ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் (அயர்லாந்து, 12வது வீராங்கனை)

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை