கம்பீர் குணம் என்னவென்று நான் அறிவேன் - ரிக்கி பாண்டிங்!

Updated: Wed, Nov 13 2024 22:51 IST
Image Source: Google

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. முன்னதாக இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் படுதோல்வியைச் சந்தித்தது.

இதனால் அணியின் மூத்த வீரர்கள் மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி குறித்தும், ரோஹித், விராட் கோலியின் ஃபார்ம் குறித்தும், ஆஸ்திரேலிய தொடர் குறித்தும் தனது கருத்துகளை தெரிவித்திருந்தார். 

ஆனால் அச்சயமயத்தில் விராட் கோலி குறித்து ரிக்கி பாண்டிங் விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த கம்பீர், “ரிக்கி பாண்டிங்குக்கும் இந்திய கிரிக்கெட்டிற்கும் என்ன சம்பந்தம்? அவர் ஆஸ்திரேலியாவைப் பற்றி பேச வேண்டும். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை” என காட்டமான பதிலை வழங்கினார். கம்பீரின் இந்த பதிலானது சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் கௌதம் கம்பீரின் கருத்து குறித்து பேசிய ரிக்கி பாண்டிங், “நான் விராட் கோலியின் ஃபார்ம் குறித்து மட்டுமே எனது கருத்தை தெரிவித்திருந்தேன். மேலும் நீங்கள் இதுகுறித்து விராட் கோலியிடம் கேட்டல் கூட அவர், தனது ஃபார்ம் குறித்து கவலை பட்டிருப்பார். ஏனெனில் அவர் கடந்த காலங்களில் செய்ததை தற்போது அவரால் செய்யமுடியாமல் இருப்பை அவரும் உணர்வார். எந்தவகையிலும் நான் அவரை குறைத்து மதிப்பிடவில்லை. 

 

அவர் ஆஸ்திரேலியாவில் நன்றாக விளையாடி இருக்கிறார் என்றும், அவர் இங்கு மீண்டு வர ஆர்வமாக இருப்பார் என்றும் தன் நான் கூறினேன். ஏனெனில் அவர் ஒரு கிளாஸ் பிளேயர் மற்றும் அவர் கடந்த காலத்தில் ஆஸ்திரேலியாவில் நன்றாக விளையாடியுள்ளார். ஆனால், எனது கருத்து வேறு வகையில் எடுத்து செல்லப்பட்டுள்ளது. அதேசமயம் கம்பீர் அப்படி பேசியதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. ஏனெனில் அவர் குணம் என்னவென்று நான் அறிவேன்” என தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

முன்னதாக, இனி நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு கௌதம் கம்பீரை பிசிசிஐ அனுப்ப வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியிருந்தார். அவரது கருத்து ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறிய நிலையில், தற்சமயம் ரிக்கி பாண்டிங்கும் தன் மீதான கௌதம் கம்பீரின் கருத்துக்கு பதிலளித்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை