இந்த வீரரால் ஆஸ்திரேலியாவுக்கு உலக கோப்பையை பெற்றுத் தர முடியும் - ரிக்கி பாண்டிங்!

Updated: Mon, Jul 25 2022 14:32 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் டிம் டேவிட். தற்போது 26 வயது டிம் டேவிட், ஆஸ்திரேலிய அணிக்காக 14 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 4 அரை சதங்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் - 158.52. 

இதன் காரணமாக ஐபிஎல் 2022 ஏலத்தில் ரூ. 8.25 கோடிக்கு டிம் டேவிட்டைத் தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐபிஎல் 2022 போட்டியில் 8 போட்டிகளில் விளையாடிய அவர் 186 ரன்கள் எடுத்தார். அதில் அவரது ஸ்டிரைக் ரேட் - 216.28.

இந்நிலையில் டிம் டேவிட்டால் உலகக் கோப்பையைப் பெற்றுத் தர முடியும் என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசிய அவர், “நான் மட்டும் ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தால், டிம் டேவிட் போன்ற ஒரு வீரரை அணியில் சேர்த்துக்கொள்ள விரும்புவேன். அவர் விளையாடுகிறாரோ இல்லையோ, அவரைப் போன்ற அதிரடியாக விளையாடக்கூடிய வீரர் அணியில் இருக்கவேண்டும். அவரால் ஆட்டங்களில் வெற்றியை அளிக்க முடியும். அவரைப் போன்ற ஒரு வீரரால் உலகக் கோப்பையை வென்று தர முடியும். அணிக்குள் நுழைந்துவிடுகிற சாதாரண வீரர் அல்ல அவர். 

2003 உலகக் கோப்பையில் விளையாடிய ஆண்ட்ரூ சைமண்ட்ஸை நினைவூட்டுகிறார். அவரைப் போன்ற வீரர்களை அணியில் சேர்த்து வாய்ப்பளித்தால் போட்டியை வென்று தருவார்கள். அப்படித்தான் டிம் டேவிட்டைப் பார்க்கிறேன். 

ஆஸ்திரேலிய அணியில் மிகச்சிறந்த நடுவரிசை வீரர்கள் உள்ளார்கள். ஆனால் கடந்த இரு வருடங்களில் டிம் டேவிட்டைப் போன்ற ஒரு வீரர் உருவாகவில்லை. கடந்த ஒன்றரை வருடங்களாக அவர் விளையாடிய எல்லாப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். ஐபிஎல்-லில் நிறைய போட்டிகளில் விளையாடவில்லை. மிக மிக ஆபத்தான டி 20 வீரர். உலகக் கோப்பைப் போட்டிக்கு டிம் டேவிட்டைத் தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் தீவிரமாக யோசிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை