ரிங்கு சிங்வால் நிச்சயம் தோனி, யுவராஜ் போல அசத்த முடியும் - ரஹ்மனுல்லா குர்பாஸ்!

Updated: Sat, Jan 20 2024 13:34 IST
Image Source: Google

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக பெங்களூருவில் நடைபெற்ற கடைசி போட்டியில் இரட்டை சூப்பர் ஓவரில் ஆஃப்கானிஸ்தானை போராடி இந்தியா தோற்கடித்தது மறக்க முடியாததாக அமைந்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஆரம்பத்திலேயே முக்கிய வீரர்களின் விக்கெட்களை இழந்து 22/4 என தடுமாறியது.

அப்போது கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடி 190 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி வரை அவுட்டாகாமல் இந்தியா 212 ரன்கள் குவிக்க உதவினார்கள். குறிப்பாக ரிங்கு சிங் மிகவும் இளம் வயதிலேயே அழுத்தமான சூழ்நிலையில் அபாரமாக விளையாடி கடைசி ஓவரில் 3 சிக்சர்கள் அடித்தது உட்பட 69* ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் 5 அடுத்தடுத்த சிக்சர்களை அடித்து கொல்கத்தாவுக்கு அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமானார். அப்போதிலிருந்து இதுவரை பெரும்பாலான போட்டிகளில் மிடில் ஆர்டரில் வந்து வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்து கொடுக்கும் ரிங்கு சிங் ஜாம்பவான் தோனி போல அடுத்த ஃபினிஷராக உருவெடுத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தோனி, யுவராஜ் போல வருங்காலங்களில் இந்திய அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ரிங்கு செயல்படுவார் என்று ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கண்டிப்பாக அவரால் தோனி, யுவராஜ் போல அசத்த முடியும். தற்போது அவர் விளையாடும் விதம் நம்ப முடியாததாக இருக்கிறது

சமீப காலங்களில் இந்திய அணிக்காக அனைத்து எதிரணிகளுக்கு எதிராகவும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அது அணிக்காக இங்கே வந்து நான் சாதாரணமாக விளையாடாமல் ஏதோ சாதிக்க வந்துள்ளேன் என்பதை அவர் காண்பிக்கிறார். மிகவும் பசியுடைய அவர் கடினமாக உழைக்கிறார். அவர் நல்ல கிரிக்கெட்டர் மற்றும் ஃபினிஷர் என்பதில் சந்தேகமில்லை. மிகவும் அறிவுபூர்வமான வீரரான அவர் சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் தன்னை விரைவாக மாற்றிக் கொள்கிறார்.

இந்திய அணிக்காக வருங்காலங்களில் அவர் அடுத்த ஃபினிஷராகவும் நல்ல கிரிக்கெட்டராகவும் இருப்பார். கொல்கத்தா அணியில் ரிங்கு உப்பை போல் இருப்பார். அவர் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க கூடியவர். நல்ல நண்பர்களாக இருக்கும் நாங்கள் ஐபிஎல் தொடரையும் தாண்டி தொடர்பில் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை