தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதலாவது போட்டி டர்பனில் நேற்று முந்தினம் நடைபெற இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டி டாஸ் போடப்படாமலேயே முழுவதுமாக கைவிடப்பட்டது.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான் இரண்டாவது டி20 போட்டி இன்று க்கெபர்ஹாவிலுள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஷுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து டக் அவுட்டாகி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர். 

Advertisement

இதனால் 6/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியாவுக்கு கேப்டன் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் தம்முடைய பங்கிற்கு அதிரடி காட்டிய திலக் வர்மா 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த ரிங்கு சிங் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் தென்னாபிரிக்க பவுலர்களை தம்முடைய ஸ்டைலில் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் புரட்டி எடுத்த சூரியகுமார் யாதவ் 3ஆவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதம் கடந்து 5 பவுண்டரி 3 சிக்சருடன் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஆனால் அப்போது வந்த ஜித்தேஷ் சர்மா 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் நிதானமாக விளையாடிய ரிங்கு சிங் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்து இந்தியா 150 ரன்கள் தாண்ட உதவினர். குறிப்பாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்கம் வீசிய 19வது ஓவரின் 5வது பந்தில் இறங்கி வந்து முரட்டுத்தனமான சிக்சரை அடித்த அவர் கடைசி பந்தில் நேராக தெறிக்க விடும் சிக்சரை பறக்க விட்டார்.

 

அப்படி நேராக சென்ற 2ஆவது சிக்சர் மைதானத்தின் எதிர்புறத்தில் செய்தியாளர்கள் அமர்ந்து செய்திகளை சேகரிக்கக்கூடிய அறையின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகளை நொறுக்கியது. அந்தளவுக்கு அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 9 பவுண்டரி 1 சிக்ஸருடன் 68 ரன்களை எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்து இந்தியாவை காப்பாற்றினார்.

Advertisement

அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. இதனால் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்க அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து களமிறங்கியுள்ள தென் ஆப்பிரிக்க அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News