இந்தியா - இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி,  முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, பேர்ஸ்டோவின் அபாரமான சதத்தால்(106) முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் அடித்தது.

Advertisement

132 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் அரைசதம் கடந்திருந்த புஜாரா ஆட்டமிழக்க, அவருடன் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடிய ரிஷப் பந்தும் அரைசதம் அடித்தார். முதல் இன்னிங்ஸில் சதமடித்து 146 ரன்களை குவித்த ரிஷப் பண்ட் 2வது இன்னிங்ஸில் அரைசதம் கடந்து ஆடிவருகிறார்.

அதன்பின் 57 ரன்கள் சேர்த்திருந்த ரிஷப் பந்த் ஜேக் லீக் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.

இந்நிலையில் ரிஷப் பந்த அரைசதம் கடந்ததன் மூலம் வெளிநாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்களை குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் 1953ஆம் ஆண்டு விஜய்  மஞ்சரேக்கர் கிங்ஸ்டனில் ஒரு டெஸ்ட் போட்டியில் 161 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. 

அதன்பின்னர் தோனி உட்பட எத்தனையோ சிறந்த விக்கெட் கீப்பர்கள் விளையாடியும், அவர்களால் இந்த சாதனையை முறியடிக்க முடியாமல் இருந்தது. 69 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ரிஷப் பண்ட் அந்த சாதனையை முறியடித்துள்ளார். எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் மொத்தமாக(2 இன்னிங்ஸிலும் சேர்த்து) 200 ரன்களை கடந்து ஆடிவருகிறார். 

Advertisement

 

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக திகழும் ரிஷப் பந்த், டி20 கிரிக்கெட்டில் சொதப்பினாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக தனது அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திவருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தில் 2 சதம், ஆஸ்திரேலியாவில் ஒரு சதம், தென் ஆப்பிரிக்காவில் ஒரு சதம் என இந்திய விக்கெட் கீப்பராக பல்வேறு சாதனைகளை புரிந்துவருகிறார். 

அந்தவரிசையில் இப்போது வெளிநாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்களை குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News