அதிரடியாக அரைசதம் அடித்து சாதனைகளை குவித்த ரிஷப் பந்த்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயன ஐந்தாவது டெச்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிரது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களையும், ஆஸ்திரேலிய அணி 181 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்துள்ளது.
இந்நிலையில் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து தனது இன்னிங்ஸைத் தொடங்கினார். தொடர்ந்து இப்போட்டியில் அவர் அபாரமாக விளையாடியதுடன் 29 பந்துகளில் அரைசதம் கடந்தும் அசத்தினார். இதில் 33 பந்துகளில் 184.85 ஸ்டிரைக் ரேட்டில் 61 ரன்கள் எடுத்த பந்த், அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசி இருந்தார். இதன்மூலம் அவர் தற்போது சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் சாதனை முறியடிப்பு
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய பேட்டர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரவீந்திர ஜடேஜாவை பின்னுக்கு தள்ளி ரிஷப் பந்த் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை 43 டெஸ்டில் 75 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரிஷப் பந்த் அதில் 73 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 69 சிக்ஸர்களை விளாசியுள்ளனர். இப்போது இந்த பட்டியலில் வீரேந்திர சேவாக் (90), ரோஹித் சர்மா (88) மற்றும் எம்எஸ் தோனி (78) ஆகியோர் மட்டுமே ரிஷப் பந்திற்கு முன்னிலையில் உள்ளனர்.
இரண்டாவது அதிவேக அரை சதம்
இந்த இன்னிங்ஸின் போது ரிஷப் பந்த் 29 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இந்த மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த இரண்டாவது வீரர் எனும் கபின் தேவின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்துள்ளார். இதற்கு முன் கடந்த 1982ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் 30 பந்துகளில் அரைசதம் அடித்து இரண்டாம் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு 2022ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக ரிஷம் பந்த் 28 பந்துகளில் அரைசதம் கடந்தததே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருகிறது.
விவியன் ரிச்சர்ட்ஸை சமன்செய்தார்
Also Read: Funding To Save Test Cricket
இதுதவிர்த்து 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 160 அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் இரண்டு முறை ஐம்பது அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் ரிஷப் பந்த் பெற்றுள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருமுறை 160 ஸ்டிரைக் ரெட்டில் இரண்டு அரைசதங்களை அடித்து சாதனை படைத்திருந்த நிலையில், அதனைத் தற்போது ரிஷப் பந்த் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.