ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சந்தித்தது. முதலில் பேட் பிடித்த டெல்லி அணி 3 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது. 150 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement

இத்தொடரில் லக்னோ அணி தொடர்ச்சியாக 3ஆவது ஆட்டத்தில் வென்றுள்ளது. புள்ளிகள் பட்டியலிலும் 2ஆவது இடத்திற்கு அந்த அணி முன்னேறியது. டெல்லி அணி 7ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் இந்த போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் டெல்லி அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அணியின் கேப்டன் என்ற முறையில்  ரிஷப் பந்த்-க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இது இந்த சீசனின் முதல் குற்றமாகும், இதனால் கேப்டன் ரிஷப் பந்த் அபராதத்துடன் விடுவிக்கப்பட்டார். ஆனால், அடுத்த போட்டியில் தவறு செய்தால் இடைநீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News