IND vs BAN, 2nd Test: கபில் தேவ்வின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரிஷப் பந்த்?

Updated: Thu, Sep 26 2024 10:21 IST
Image Source: Google

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது சமீபத்தில் நடந்துமுடிந்தது. 

இப்போட்டியில் இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் வகித்து வருகிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் எதிவரும் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றாலோ அல்லது போட்டியை டிராவில் முடித்தாலும் கூட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தும். அதேசமயம் வங்கதேச அணியானது தொடர் இழப்பை தடுப்பதற்காக கடுமையாக போராடும் என்பதல் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இந்திய வீரர் ரிஷப் பந்த், முன்னாள் கேப்டன் கபில் தேவ்வின் சாதனையை  முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ‘

அந்தவகையில் இந்தப் போட்டியில் ரிஷப் பந்த் 3 சிக்சர்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் கபில் தேவ்வை பின்னுக்குத் தள்ளி ஆறாவது இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்தவகையில் ரிஷப் பந்த்  இந்திய அணிக்காக இதுவரை 33 டெஸ்டில் 56 இன்னிங்ஸ்களில் விளையாடி 59 சிக்ஸர்களை அடித்து 7ஆம் இடத்தில் உள்ளார்.

அதேசமயம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இந்திய அணிக்காக 131 டெஸ்டில் 184 இன்னிங்ஸில் விளையாடி 61 சிக்சர்களை விளாசி இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் 6ஆம் இடத்திலுல் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் 90 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். 

அவரைத்தொடர்ந்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 84 சிக்ஸர்களை விளாசி இரண்டாம் இடத்திலும், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 78 சிக்ஸர்களை விளாசி மூன்றாம் இடத்திலும், முன்னாள் ஜாம்பவாம் சச்சின் டெண்டுல்கர் 69 சிக்ஸர்களை விளாசி நான்காம் இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 64 சிக்ஸர்களை விளாசி 5ஆம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் , ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை