குட்டிக்கரணம் அடித்து சதத்தைக் கொண்டாடிய ரிஷப் பந்த்- வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மேத்யூ பிரீட்ஸ்கி 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த மிட்செல் மார்ஷ் மற்றும் கேப்டன் ரிஷப் பந்த் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மிட்செல் மார்ஷ் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 67 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாடி வந்த ரிஷப் பந்த் ஐபிஎல் தொடரில் தனது 2ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.
மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பந்த் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 118 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களைச் சேர்த்துள்ளது. இதனையடுத்து கடின இலக்கை நோக்கி ரயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது விளையாடி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் ரிஷப் பந்த் சதமடித்து அசத்தியதை கொண்டாடும் வகையில் மைதானத்தில் குட்டிக்கரணம் அடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொதப்பி வந்த ரிஷப் பந்த் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர் சீசனின் கடைசி போட்டியில் தனது ஃபார்முக்கு திரும்பியதுடன் சதமடித்து விமர்சனங்களுக்கு பதிலடியைக் கொடுத்திருந்தார்.
மேலும் எதிர்வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சதமடித்து அசத்தி இருப்பது இந்திய ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்ப்டுத்திவுள்ளது. இந்நிலையில் ரிஷப் பந்த் குட்டிக்கரணம் அடித்து தனது சதத்தைக் கொண்டாடிய காணொளியானது தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (வாரம்/சி), ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், நுவான் துஷாரா.
இம்பேக்ட் வீரர்கள்: டிம் சீஃபர்ட், ஸ்வப்னில் சிங், சுயாஷ் சர்மா, ரசிக் சலாம், மனோஜ் பந்தங்கே.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: மிட்செல் மார்ஷ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (வாரம்/சி), ஆயுஷ் படோனி, அப்துல் சமத், ஹிம்மத் சிங், ஷாபாஸ் அகமது, திக்வேஷ் சிங் ரதி, அவேஷ் கான், வில்லியம் ஓ ரூர்க்.
Also Read: LIVE Cricket Score
இம்பேக்ட் வீரர்கள்: யுவராஜ் சௌத்ரி, அர்ஷின் குல்கர்னி, ஆகாஷ் சிங், பிரின்ஸ் யாதவ் மற்றும் ரவி யாதவ்