ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. லீக் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் மும்பை-டெல்லி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர் முடிவில் 177 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 106 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து. இதனால் டெல்லி தோல்வியடைந்து விடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரிஷப்பின் கேப்டன்ஷிப் பெரிதும் பேசப்பட்டது.

Advertisement

இந்நிலையில் ரிஷப் பண்ட் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி போல செயல்படுகிறார் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். 

Advertisement

இது குறித்து பேசிய அவர், “ரிஷப் பண்ட் அழுத்ததில் விளையாடும் வீரர் அல்ல. அவர் எப்போதும் இயல்பான விளையாட்டை விளையாடக்கூடியவர். கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை அருமையாக பயன்படுத்தி கொள்வார். தொடர்ந்து சிறப்பாக ஆடக்கூடியது அவ்வளவு எளிதல்ல. 

அவரது சாமர்த்தியமான கேப்டன்ஷிப் எனக்கும் பிடிக்கும். குல்தீப் யாதவை சரியாக பயன்படுத்தியதுடன் சூழ்நிலைக்கு ஏற்ப பந்து வீச்சை மாற்றி அமைத்தார். அதே சமயம் அவர் தெருக்களில் கிரிக்கெட் விளையாடுவது போல விளையாடுகிறார். எனவே இன்னும் அதிகமான விஷங்களை கற்றுக்கொள்வார்.

அவரை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியுடன் ஒப்பிடலாம். ரிஷப்பிடம் எனக்கு பிடித்தது. டோனியை போலவே அதிகமாக சிந்தித்து செயல்படுவார். ஆட்டத்திற்கு முன் அவரது பயிற்சி மற்றும் பணி நெறிமுறைகள் பெரும்பாலும் டோனியை போல் இருக்கும்” என்று தெரிவித்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News