இலங்கை ஒருநாள் அணியில் இடம்பிடித்த பதிரானா!
சிஎஸ்கே அணியின் 20 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா இலங்கையை சேர்ந்தவர். இவர் இந்தாண்டு முதன்முறையாக முழுநேர பந்துவீச்சாளராக சிஎஸ்கேவில் களமிறங்கினார். கடந்தாண்டு ஒரு சில போட்டிகள் மட்டுமே விளையாடினார். பதிரானாவின் பந்து வீசும் ஸ்டைல் மலிங்காவை போலவே இருக்கும். அதனால் அவரை குட்டி மலிங்கா என ரசிகர்கள் அன்போடு அழைக்கின்றனர்.
ஐபிஎல் போட்டியின் 16ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது. சென்னைக்கு இது 5-ஆவது சாம்பியன் பட்டமாகும். சென்னை சூப்பா் கிங்ஸ் சிறப்பாக பந்து வீசினார் பதிரானா.
இந்நிலையில், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் போட்டியில் விளையாடும் இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் முதன்முறையாக மதீஷா பதிரானாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி: தசுன் ஷானகா (கேப்டன்), குசால் மெண்டிஸ், பதும் நிஷாங்கா, துமுத் கருணாரத்னே, சதீரா சமரவிக்ரமா, ஆஞ்சலோ மேதிவ்ஸ், தனஞ்செய டி சில்வா, சரிதா அசலங்கா, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, துஷன் ஹேமந்தா, சமிகா கருணாரத்னே, துஷ்மந்த் சமீரா, மதீஷா பதிரானா, லஹிரு குமாரா, குசன் ரஜிதா.