சேவாக்கின் சாதனையை முறியடித்து ரியான் பராக் புதிய உலக சாதனை!

Updated: Fri, Oct 27 2023 21:00 IST
சேவாக்கின் சாதனையை முறியடித்து ரியான் பராக் புதிய உலக சாதனை! (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வருபவர் ரியான் பராக். அதிரடி ஆல் ரவுண்டரான இவர், கடந்த ஐபிஎல் சீசனில் ஏழு போட்டிகளில் விளையாடி வெறும் 78 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது பேட்டிங் சராசரி 13 மட்டுமே. அவரது மோசமான செயல்பாடுகளால் அப்போது ரசிகர்களால் மிகக் கடுமையாக விமர்சனமும், கிண்டலும் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அதின்பின் இந்தியாவில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சிறப்பான ஆட்டத்த வெளிப்படுத்தி அசத்தினார். இதையடுத்து தற்போது உள்ளூர் டி20 தொடரான சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தன் சொந்த மாநிலமான அசாம் அணிக்காக ரியான் பராக் விளையாடி வருகிறார்.

இந்த தொடரில் இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள அவர் கடைசி ஆறு போட்டிகளிலும் அரைசதம் அடித்து தெறிக்க விட்டுள்ளார். இதன்மூலம் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்தர் சேவாக் 2012இல் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்தார். அது நீண்ட நாட்களாக முறியடிக்கப்படாத சாதனையாக இருந்தது. அந்த சாதனையை உடைத்து இருக்கிறார் ரியான் பராக்.

அசாம் மாநில வீரர் ரியான் பராக், சேவாக்கின் 11 ஆண்டுகால சாதனயை உடைத்து தன் மீதான விமர்சனத்துக்கும் சேர்த்து பதிலடி கொடுத்துள்ளார். தற்போது சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ஏழு போட்டிகளில் 440 ரன்கள் குவித்து இருக்கிறார். அவரின் சராசரி 62.86 ஆகும். கடந்த ஆறு இன்னிங்க்ஸ்களில் அவர்  61 (34), 76 (37), 53 (29). 76 (39), 72 (37), மற்றும் 57 (33) ரன்களை குவித்து ரசிகர்களின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை