பவுண்டரி எல்லையில் அசத்தலான கேட்சை பிடித்த விஜய் சங்கர் - வைரலாகும் காணொளி!

Updated: Wed, Apr 10 2024 22:27 IST
Image Source: Google

ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலி பந்துவீசுவதக அறிவிக்க, இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் ஆகியோரது அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 68 ரன்களையும், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பராக் 3 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 76  ரன்களையும் சேர்த்தனர். குஜராத் அணி தரப்பில் ரஷித் கான், உமேஷ் யாதவ், மொஹித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இதையடுத்து 197 ரன்கள் என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது. 

இந்நிலையில், இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பராக்கை பவுண்டரி எல்லையில் தனது அபாரமான கேட்சியின் மூலம் விஜய் சங்கர் வழியனுப்பி வைத்தார். அதன் படி இப்போட்டியின் 19ஆவது ஓவரை குஜராத் அணியின் மோஹித் சர்மா வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட ரியான் பராக், ஓவரின் நான்காவது பந்தையும் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் லாங் ஆஃப் திசையில் தூக்கி அடித்தார். 

 

ரியான் பராக் பந்தை சரியாக டைமிங் செய்ய அது சிக்ஸரை நோக்கி சென்றது. அப்போது அந்த திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த விஜய் சங்கர், பந்தை சரியாக கணித்ததுடன் அதனை கேட்ச் பிடித்தார். இருப்பினும் அவர் பவுண்டரி எல்லையில் நிலைகுழைய, அதன்பின் எப்படியோ சமாளித்து அந்த கேட்சைப் பிடித்தார். இப்போட்டியில் குஜராத் அணி வீரர்கள் அடுத்தடுத்து கேட்சுகளை தவறவிட்ட நிலையில், விஜய் சங்கர் பிடித்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை