இந்திய சீசனின் 1000 சிக்ஸர்கள், 300+ இன்னிங்ஸை நாம் பார்ப்போம் - ராபின் உத்தப்பா!

Updated: Thu, Mar 20 2025 13:50 IST
Image Source: Google

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளை மறுநாள் (மார்ச் 22) முதல் தொடங்க உள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. 

இந்நிலையில் எப்போதும் போல, இந்த சீசனுக்கு முன்பே கணிப்புகளின் சுற்று தொடங்கிவிட்டது. பல நாடுகளைச் சேர்ந்து முன்னாள் வீரர்களும் நடப்பு ஐபிஎல் தொடருக்கான கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவும் தனது கணிப்பைச் வெளியிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக அவர் இந்த சீசனில் 300 ரன்கள் என்ற தடையனது உடைபடும்ம் என்றும் கணித்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுகுறித்து பேசிய அவர். "கடந்த 17 சீசன்கள், ஐபிஎல் கிரிக்கெட்டை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது, விளையாட்டை இரண்டு அல்லது மூன்று நிலைகளால் உயர்த்தியுள்ளது. பரிணாமம் மிக வேகமாக இருந்ததால் சிலர் அதைத் தொடர சிரமப்படுகிறார்கள். கிரிக்கெட்டுடன் தொடர்புடைய ஒரு குறிப்பிட்ட காதல் இருந்தது, ஆனால் இப்போது, ​​அந்த காதல் மிக வேகமாகவும், அதிக உணர்ச்சிவசப்பட்டதாகவும், அதிக அட்ரினலின் சார்ந்ததாகவும் மாறிவிட்டது.

இதையெல்லாம் நாம் பார்த்தது போல் உணர்கிறேன், ஆனால் இன்னும் வரவிருக்கிறது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த சீசனில், 1,000 சிக்ஸர்கள், ஒரு இன்னிங்ஸில் 300 ரன்கள் எடுக்கும் ஒரு அணி அல்லது 275+ ரன்களைத் துரத்தும் ஒரு அணி ஆகியவற்றை நிச்சயம் நாம் காண்போம்” என்று தனது கணிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் உத்தப்பாவின் இக்கருத்தானது பேசுபொருளாக மாறியுள்ளது. 

முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் லக்ஷ்மிபதி பாலாஜி கூறுகையில். “கடந்த 17 ஆண்டுகளில், ஐபிஎல் கிரிக்கெட்டை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் சென்று, உலகம் முழுவதும் உள்ள லீக்குகளுக்கு ஒரு அளவுகோலாக மாறியுள்ளது. திறமையை எவ்வாறு வளர்க்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உலகம் ஐபிஎல்லைப் பார்க்கிறது. இந்த லீக் பொருளாதாரத்தை உயர்த்துவதோடு சர்வதேச கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தவும் பாடுபடுகிறது.

Also Read: Funding To Save Test Cricket

ஆறு மாதங்களில், இந்தியா இரண்டு பெரிய கோப்பைகளை வென்றுள்ளது, அதற்கான பெரும் பாராட்டு ஐபிஎல்-க்கு சொந்தமானது. அதன் உரிமையாளர்கள், தலைமைத்துவக் குழு மற்றும் அவர்கள் உருவாக்கிய சுற்றுச்சூழல் அமைப்பு. அவர்களின் கூட்டு முயற்சிகள் லீக்கை இன்றைய நிலையில் மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை