ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று லக்னோவில் நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதின. அதில் தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்று சொந்த மண்ணில் வலுவாக இருக்கும் இந்தியாவுக்கு எதிராக ஏற்கனவே 4 தோல்விகளை பதிவு செய்து அரையிறுதி நழுவ விட்ட இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

Advertisement

இதைத்தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் மற்றொரு தொடக்க வீரர் ஷுப்மன் கில் 9 ரன்களில் கிளீன் போல்ட்டானார். அப்போது வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 4 ரன்னில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்.

Advertisement

அதனால் 40/3 என ஆரம்பத்திலேயே சரிவை சந்தித்த இந்தியாவுக்கு அடுத்ததாக வந்த கேஎல் ராகுல் நிதானமாக விளையாடி கேப்டன் ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா அரை சதம் கடந்து இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்தார்.

நேரம் செல்ல செல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 பவுண்டரி 3 சிக்சருடன் 87 ரன்கள் எடுத்திருந்த போது அடில் ரஷித் சுழலில் சிக்கி அவுட்டானது ரசிகர்களுக்கு மற்றுமொரு ஏமாற்றமாக அமைந்தது. ஆனாலும் இந்த உலகக் கோப்பையில் ஏற்கனவே சதமடித்த நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் இந்த போட்டியிலும் இந்தியா சரிந்த போது நங்கூரமாக விளையாடி ஓரளவு காப்பாற்றினார்.

அத்துடன் இந்த 87 ரன்களையும் சேர்த்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டையும் சேர்த்து 18,000 ரன்களை குவித்த 5வது இந்திய வீரர் என்ற சாதனை படைத்த ரோஹித் சர்மா ஜாம்பவான்கள் சச்சின், டிராவிட் ஆகியோர் இருக்கும் பட்டியலில் இணைந்தார். அதுபோக சர்வதேச கிரிக்கெட்டில் 2023 ஒரு வருடத்தில் 1,000 ரன்கள் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். 

  • சச்சின் டெண்டுல்கர் : 34357
  • விராட் கோலி : 26121
  • ராகுல் டிராவிட் : 24064
  • சௌரவ் கங்குலி : 18433
  • ரோஹித் சர்மா : 18040
  • எம்எஸ் தோனி : 17092

இதன்முலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை எடுத்தது. இதையடுத்து 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தற்போது விளையாடி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News