ENG vs IND: ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!

Updated: Wed, Jul 13 2022 13:52 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி லண்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் 111 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 58 பந்துகளில் 76 ரன்களை விளாசினார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களும் அடங்கும். இதனால் ஒரு விக்கெட்கள் கூட இன்றி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த இன்னிங்ஸின் மூலம் ரோஹித் சர்மா பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் இந்திய என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார். ஒருநாள் கிரிக்கெட்டில் இவர் இதுவரை 250 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

இதற்கு முன்னர் 3 வீரர்கள் தான் அதிகபட்ச சிக்ஸர்களை அடித்துள்ளனர். பாகிஸ்தானின் சாஹித் அஃப்ரிடி ( 351 சிக்ஸர்கள் ), வெஸ்ட் இண்டீஸ் கிறிஸ் கெயில் ( 331 ), இலங்கையின் சனத் ஜெயசூர்யா (270 சிக்ஸர்கள் ) ஆகியோர் அடித்துள்ளனர். தற்போது முதல் இந்தியராக ரோஹித்தும் இந்தவரிசையில் இணைந்துள்ளார்.

ஒட்டுமொத்த சர்வதேச பட்டியலில் ரோஹித் 4ஆவது இடத்தில் இருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா தான் முதலிடத்தில் உள்ளார். மொத்தமாக 72 இன்னிங்ஸ்களில் 126 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளனர். இவரை தொடர்ந்து கிறிஸ் கெயில் 20 இன்னிங்ஸ்களில் 93 ரன்களை அடித்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை