தினேஷிற்கு பதிலாக பந்தை தான் களமிறக்க நினைத்தேன் - காரணத்தை விளக்கிய ரோஹித்!

Updated: Sun, Sep 25 2022 11:56 IST
Image Source: Google

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது.

போட்டி இரண்டரை மணி நேரம் தாமதமாக துவங்கியதால் போட்டியின் ஓவரும் தலா 8ஆக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மேத்யூ வேட் 43* ரன்களும், ஆரோன் பின்ச் 31 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு விராட் கோலி, கே.எல் ராகுல் போன்ற வீரர்கள் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், கேப்டன் ரோஹித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தின் மூலமும், கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தின் மூலம் 7.2 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக அவரது இடத்தில் தினேஷ் கார்த்திக்கை களமிறக்கியதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “ரிஷப் பண்ட்டை களம் இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் கடைசி ஓவரை விசீய டேனியல் சாம்ஸ் ஆப் கட்டர்களை வீசுவார் என்பதனால் தினேஷ் கார்த்திக்கை களம் இறக்க நினைத்தேன். அதேபோன்று அவரும் தனது ரோலை மிகச் சிறப்பாக செய்து கொடுத்து போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை