ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்லன்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 81 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 47 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் ஒரு பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 33 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 சிக்ஸர்களுடன் 22 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.

Advertisement

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களைக் குவித்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சாய் கிஷோர் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிவுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி தற்போது வரையிலும் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

ஐபிஎல்லில் 7000 ரன்கள்

இந்நிலையில் இப்போட்டியில் மும்பை அணிக்காக அபார ஆடடத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த ரோஹித் சர்மா சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். அதன்படி இப்போட்டியில் ரோஹித் சர்மா 43 ரன்களைச் சேர்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் 7ஆயிரம் ரன்களைக் கடந்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் விராட் கோலிக்கு பிறகு 7ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். விராட் கோலி 257 இன்னிங்ஸ்களில் 8606 ரன்கள் எடுத்துள்ளார். 

ஐபிஎல்லில் 300 சிக்ஸர்கள்

Advertisement

Also Read: LIVE Cricket Score

குஜராத் டைட்டன்ஸூக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 4 சிக்ஸர்களை அடித்ததன் மூலம், ஐபிஎல் தொடரில் தனது 300 சிக்ஸர்களை பூர்த்தி செய்ததுடன், இந்த மைல் கல்லை எட்டிய இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஐபிஎல் தொடரில் 358 சிக்ஸர்களை அடித்துள்ள நிலையில், தற்போது ரோஹித் சர்மா 302 சிக்ஸர்களை விளாசி அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியாலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News