நாங்கள் எப்படி சேஸ் செய்தோம் என்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது - ரோஹித் சர்மா!

Updated: Mon, May 01 2023 13:43 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் ஆயிரமாவது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியில் டாசை வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. அந்த அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேமரூன் கிரீன் மற்றும் சூரியகுமார் யாதவ் சரியான பங்களிப்பை தந்தார்கள். இறுதிக்கட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடி 14 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை டிம் டேவிட் வெல்ல வைத்தார். மும்பை வான்கடே மைதானத்தில் 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்யப்பட்ட முதல் போட்டி இதுவாகும்.

வெற்றிக்குப் பின் பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா “நாங்கள் எப்படி சேஸ் செய்தோம் என்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. கடைசி ஆட்டத்திலும் நாங்கள் இலக்கை நெருங்கி வந்தே இங்கு தோற்றோம். இதனால் இந்த வெற்றி மகிழ்ச்சியாக இருக்கிறது. பொல்லார்டின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். ஆனால் டிம் டேவிட் நிறைய திறமையும் சக்தியும் கொண்டவராக இருக்கிறார். அவர் இந்த இடத்தில் வந்து விளையாடுவது நிறைய உதவியாக இருக்கிறது.

அணியில் மாற்றங்களை செய்வது கடினமானது. ஆனால் நிலைமைகளுக்கு தகுந்தபடி அணியில் மாற்றங்கள் செய்ய வேண்டியதாகத்தான் இருக்கிறது. எனவே வீரர்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும். பந்துவீச்சாளர்களுக்கு ஆட்ட பயிற்சி தேவை என்பது தெரியும். ஆர்ச்சர்க்கு ஒரு பெரிய காயம் ஏற்பட்டது. ஆனால் அவரது வேகம் ஒரு பாசிட்டிவான விஷயம். சூரியகுமாரின் இன்னிங்ஸ் முக்கியத்துவமானதாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம்.

ஜெய்ஷ்வாலை நான் கடந்த ஆண்டு பார்த்ததற்கு அவர் இந்த ஆண்டு அடுத்த கட்டத்திற்கு ஆட்டத்தை எடுத்துச் சென்றுள்ளார். அவரிடம் உனக்கு எங்கிருந்து சக்தி கிடைத்தது என்று கேட்டேன். அவர் ஜிம்முக்கு போகிறேன் என்று சொன்னார். அவர் சிறப்பாக விளையாடுவது இந்தியாவுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கும் நல்லது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை