ரோஹித் சர்மா தலைமையின் கீழ் விளையாடி இருக்கக் கூடாதா என மிகவும் விருப்பப்படுகிறேன் - இர்ஃபான் பதான்!

Updated: Thu, May 25 2023 19:55 IST
Image Source: Google

16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அதன் இறுதிக்கட்டத்தை ஏற்றி இருக்கிறது . ஒரு பிளே ஆப் போட்டி மற்றும் ஒரு எலிமினேட்டர் முடிவடைந்த நிலையில் சென்னை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது . நாளை அகமதாபாத்தில் நடைபெற இருக்கும் குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன . இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை சென்னை அணியுடன் அகமதாபாத்தில் வைத்து ஐபிஎல் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் விளையாடும் .

முன்னதாக நேற்று நடைபெற்ற லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது . இந்தப் போட்டியில் முதலில் ஆடிய மும்பை 182 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய லக்னோ அணி 101 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது . மும்பை அணிக்காக பந்து வீசிய இளம் வேகம் பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் மிகச் சிறப்பாக பந்து வீசி ஐம்புலன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார் . 

இதற்கு முன்பு இந்திய அணியின் ஜாம்பவான் அனில் கும்ப்ளே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 5 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் களைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .நேற்றைய போட்டியில் மும்பை அணியின் பந்து வீச்சு மற்றும் பில்டிங் மிக அருமையாக இருந்தது குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா வீரர்களை கையாண்ட விதம் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்று இருக்கிறது . அவரது கேப்டன்ஷிப் குறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் . இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டுறும் தற்போதைய வர்ணனையாளர் இர்ஃபான் பதான் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “நான் ரோஹித் சர்மா தலைமையின் கீழ் விளையாடி இருக்கக் கூடாதா என மிகவும் விருப்பப்படுகிறேன் . அவர் முழுமையான பந்துவீச்சாளர்களுக்கான கேப்டனாக இருக்கிறார் . இளம் வீரர்கள் தவறு செய்தாலும் அவற்றை சுட்டிக்காட்டி அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறார். மேலும் எந்த ஒரு வீரரும் அணுகக் கூடிய வகையில் எளிமையான ஒரு கேப்டனாக செயல்படுகிறார்” என பாராட்டியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை