ஐபிஎல் 2025: ஷிகர் தவான் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 33ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இவ்விரு அணிகளும் தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு தற்போது வெற்றிபெற்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். அதன்படி இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா மேற்கொண்டு 86 ரன்களை எடுத்தால், ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்களை எடுத்த இரண்டாவது வீரர் எனும் சாதனையை படைக்கவுள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவானை 221 இன்னிங்ஸ்களில் 6769 ரன்களைச் சேர்த்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா இதுவரை ஐபிஎல் தொடரில் 262 இன்னிங்ஸ்களில் விளையாடி 6684 ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் அவர் 2 சதங்களையும் 43 அரைசதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த வீரராக இந்திய அணியின் விராட் கோலி 8252 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள்
- விராட் கோலி - 8252 ரன்கள்
- ஷிகர் தவான் - 6769 ரன்கள்
- ரோஹித் சர்மா - 6684 ரன்கள்
- டேவிட் வார்னர் - 6565 ரன்கள்
- சுரேஷ் ரெய்னா - 5528 ரன்கள்
மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன்: ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் தீர், வில் ஜாக்ஸ், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா.
Also Read: Funding To Save Test Cricket
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச லெவன்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், முகமது ஷமி, ஜீஷன் அன்சாரி.