இந்திய அணியின் அனைத்து ஃபார்மேட்களுக்கு ரோஹித் கேப்டனாக வேண்டும் - கவுதம் காம்பீர்

Updated: Wed, Jan 19 2022 13:59 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு அந்த அணிக்கு எதிராக 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருந்த போதிலும் 2 க்கு 1 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இதை தொடர்ந்து இந்த சுற்றுப்பயணத்தில் இரண்டாவதாக நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்க உள்ளது.

முன்னதாக இந்த சுற்றுப்பயணம் துவங்குவதற்கு முன்பாகவே இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலியின் பதவி பறிக்கப்பட்டு அந்த பதவி துணைக் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துள்ள நிலையில், டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். இதனால் இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இந்நிலையில் இந்தியாவின் அனைத்து விதமான கிரிக்கெட் அணிகளுக்கும் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கம்பீர், “எனது புத்தகத்தில் ராகுலை துணையாக கொண்டு ரோஹித் சர்மா அனைத்து வடிவங்களிலும் இந்தியாவை வழிநடத்த வேண்டும். இந்த ஆண்டின் பிற்பகுதியில் மற்றொரு டி20 உலகக் கோப்பையைக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, அனைத்து வடிவங்களிலும் ஒரு கேப்டன் இந்திய அணியின் பணி மற்றும் அணுகுமுறையில் நிலைத்தன்மையை உறுதி செய்வார் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை