டிராவிட்டுடன் செயல்படுவது எங்களுடைய அதிர்ஷ்டம் - ரோஹித் சர்மா

Updated: Mon, Dec 13 2021 13:22 IST
Rohit Sharma Speaks About Working With "Fantastic" Rahul Dravid (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். அவருடன் இணைந்து செயல்பட ரோஹித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

விராட் கோலி கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில், அவரை நீக்கிவிட்டு தற்போது ரோஹித் சர்மாவை பிசிசிஐ நியமித்துள்ளது. இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட விருப்பம் தெரிவித்தும் அதனை ஏற்றுக்கொள்ளாத பிசிசிஐ இது போன்ற முடிவை எடுத்துள்ளது. 

டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு தனி தனி கேப்டன் இருந்தால் தேவையின்றி பிரச்சினை ஏற்படும் என்பதால் கோலியை நீக்கியதாக பிசிசிஐ விளக்கமளித்தது. எனினும் அதனை ஏற்காத ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மற்றொரு புறம் டிராவிட் தான் கோலியின் பதவி நீக்கத்திற்கு காரணம் என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ராகுல் டிராவிட் குறித்து இந்திய அணியின் புதிய கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “ராகுல் டிராவிட்டுடன் 3 போட்டிகளில் தான் பணியாற்றியுள்ளேன். ஆனால் அவ்வளவு அற்புதமாக இருந்தது. கடினமான சூழல்களில் டிராவிட் எப்படி விளையாடியுள்ளார் என்பதை எங்களால் சுலபமாக உணர முடிகிறது. டிராவிட்டுடன் இருந்தால் எந்தவித அழுத்தமும் இல்லாதது போன்று உள்ளது.

ஒரு அணியில் வீரர்கள் அழுத்தங்கள் இன்றி சரியான மனநிலையுடன் இருக்க வேண்டியது அவசியம். அப்போது தான் ஆட்டம் சிறப்பாக இருக்கும். அது டிராவிட்டால் எங்களுக்கு கிடைக்கிறது. இந்த சிறிய காலத்திலேயே அவருடன் நிறைய ஆலோசனைகளை செய்துள்ளேன். அதில் பலவற்றை கற்றுக்கொண்டுள்ளேன். இது எங்களுக்கு அதிர்ஷ்டம் என்று கூறலாம்” என தெரிவித்துள்ளார்.

இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் முழு நேர ரோஹித் சர்மா எதிர்க்கும் முதல் தொடராகும். ஒருநாள் தொடர்களில் ரோஹித் சர்மா - ராகுல் டிராவிட் ஆகியோரின் செயல்பாடுகளை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை