எங்களுக்கு இது மிகவும் சுவாரசியமான ஒரு போட்டி - ரோஹித் சர்மா!

Updated: Sat, May 13 2023 13:21 IST
Image Source: Google

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 27 ரன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியை  வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை மிகப் பிரகாசப்படுத்தி கொண்டுள்ளது. இப்போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு சூரியகுமார் யாதவ் 49 பந்துகளில் அதிரடி அரைசதம் அடித்து 218 ரன்கள் வர முக்கியக் காரணமாக இருந்தார்.

இதற்கு அடுத்து தொடர்ந்து விளையாடிய குஜராத் அணியால் 191 ரன்கள் மட்டுமே 20 ஓவர்களுக்கு எடுக்க முடிந்தது. அந்த அணியின் ரஷித் கான் 79 ரன்களை 32 பந்துகளில் அடித்து மிரட்டினார். இந்த வெற்றியின் மூலம் 12ஆவது ஆட்டத்தில் ஏழு வெற்றிகள் உடன் 14 புள்ளிகள் எடுத்து புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தை மீண்டும் பிடித்தது மும்பை.

வெற்றிக்குப் பின் பேசிய மும்பை கேப்டன் ரோஹித் சர்மா, “எங்களின் பார்வையில் எங்களுக்கு இது மிகவும் சுவாரசியமான ஒரு போட்டி. இரண்டு புள்ளிகளை பெற்றது மிகவும் மகிழ்ச்சி. நல்ல ரன்களை எடுத்து பின்பு எதிரணியை கட்டுப்படுத்தியது மிகவும் நன்றாக இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து விக்கட்டுகளை எடுத்தோம். இந்த வடிவத்தில் இது மிகவும் முக்கியம். எங்கள் பந்துவீச்சாளர்களின் சிறந்த பந்துவீச்சு முயற்சி இது.

நாங்கள் பேட்டிங் ஆர்டரில் ரைட் லெப்ட் காம்பினேஷனை வைக்க விரும்பினோம். ஆனால் சூர்யா வந்து தான் என்ன நடந்தாலும் மூன்றாவதாக போவதாகக் கூறினார். அதுவே அவருக்கு இருக்கும் நம்பிக்கை. அது மற்றவர்களுக்கும் தொற்றிக் கொள்கிறது. அவர் பழைய ஆட்டங்களைப் பற்றி நினைக்காமல் ஒவ்வொரு ஆட்டத்தையும் புதிதாகத் தொடங்குகிறார். சில நேரம் நீங்கள் உட்கார்ந்து உங்களின் சிறந்த பழைய ஆட்டங்கள் குறித்து பெருமைப்படலாம். ஆனால் சூர்யா அப்படி கிடையாது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை