தோனியின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!

Updated: Thu, Sep 29 2022 21:44 IST
Rohit Sharma Surpasses MS Dhoni’s Record For The Most T20I Victories By An Indian Skipper In A Calen (Image Source: Google)

ரோஹித் சர்மா இந்திய அணியின் முழுநேர கேப்டன் பொறுப்பை ஏற்று சுமார் ஓராண்டு ஆகிவிட்டது. கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையுடன் விராட் கோலி வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளுக்கான கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, ரோஹித் சர்மா கேப்டன்சியை ஏற்றார். அதன்பின் டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் கோலி விலகியதால் டெஸ்ட் கேப்டன்சியையும் ஏற்றார் ரோஹித்.

ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துவரும் நிலையில், டி20 உலக கோப்பையை வெல்வதற்காக தீவிரமாக தயாராகிவருகிறது. இந்நிலையில், இந்திய அணி தொடர் சாதனைகளை குவித்துவருகிறது. ஆஸ்திரேலியாக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து, ஒரு ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை குவித்த அணி என்ற சாதனையை படைத்தது இந்தியா. 

பாகிஸ்தான் அணி 2021இல் 20 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. 2022இல் 21ஆவது டி20 வெற்றியை பெற்று ஆஸ்திரேலியாக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலேயே பாகிஸ்தானின் சாதனையை முறியடித்த இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 வெற்றியுடன் சேர்த்து மொத்தமாக 22 வெற்றிகளை பெற்றது. இன்னும் டி20 உலக கோப்பையும் எஞ்சியிருப்பதால் இந்த எண்ணிக்கை உயரும்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 வெற்றி, இந்த ஆண்டில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி பெற்ற 16ஆவது டி20 வெற்றி. இதன்மூலம் ஒரு ஆண்டில் இந்தியாவிற்கு அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற தோனியின் (2016ல் 15 வெற்றிகள்) சாதனையை முறியடித்து ரோஹித் சர்மா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். டி20 உலக கோப்பையும் நடக்கவுள்ளதால் ரோஹித் சர்மாவின் இந்த வெற்றி எண்ணிக்கை இன்னும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை