ரன்கள் கூடுதலாக அடித்திருந்தாலே நிச்சயம் வென்றிருப்போம் - ரோஹித் சர்மா!

Updated: Wed, Sep 07 2022 08:37 IST
Image Source: Google

ஆசியக் கோப்பை 2022இன் சூப்பர் 4 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர் 4 சுற்றில், இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக தோற்ற நிலையில், நேற்று இலங்கையை எதிர்கொண்டது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 72, சூர்யகுமார் யாதவ் 34 ஆகியோர் மட்டுமே 20+ ரன்களை அடித்தார்கள். ஹார்திக், ரிஷப் பந்த் தலா 17 ரன்களை எடுத்த நிலையில், இறுதியில் அஸ்வின் 7 பந்துகளில் 15 ரன்களை சேர்த்ததால், இந்தியா 20 ஓவர்கில் 173/8 ரன்களை எட்டியது.

அதன்பின் இலக்கை துரத்திக் களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் பதும் நிஷங்கா 52, குஷல் மெண்டிஸ் 57 ஆகியோர் சிறப்பான தொட தந்தனர். அடுத்து ராஜபக்சா 25, ஷனகா 33 ஆகியோர் அதிரடி காட்டியதால், இலங்கை அணி 19.5 ஓவர்களில் 174/4 ரன்களை சேர்த்து, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இன்று பாகிஸ்தான் அணி ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தும் பட்சத்தில், அந்த அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். ஒருவேளை பாகிஸ்தான் அணி ஆப்கான், இலங்கைக்கு எதிராக தோற்றால் மட்டுமே, ஒரு அணி 2 புள்ளிகளில் பைனலுக்கு செல்லும் நிலை வரும். அப்போது மட்டுமே, அதுவும் நெட் ரன்ரேட் அடிப்படையில் மட்டுமே இந்தியாவால் இறுதிப் போட்டிக்கு முன்னேற ஓரளவுக்கு வாய்ப்பு இருக்கும். இதற்கு வாய்ப்பு மிகமிக குறைவு.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் தோற்ற பிறகு பேசிய ரோஹித் சர்மா, “முதல் 10 ஓவர்களில் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தோம். அடுத்த 10 ஓவர்களில் பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை. 10-15 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தாலே நிச்சயம் வென்றிருப்போம். மிடில் வரிசையில் களமிறங்கும் வீரர்கள், எந்த ஷாட்டை விளையாட வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். அர்ஷ்தீப் சிங், புவி மற்றும் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

இடது கை பேட்டர்களுக்காக ஸ்பின்னர்களை பதுக்கி வைத்திருந்தேன். ஆனால், வலது கை பேட்டர்கள் அதிக நேரம் பேட் செய்து, எனது திட்டத்தை மாற்ற வைத்தனர். ஆவேஷ் கான் காயம் காரணமாக அவதிப்பட்டதால், மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பிறகு, நாங்கள் அதிக டி20 போட்டிகளில் தோற்றகவில்லை. ஆசியிக் கோப்பை தொடரில், நாங்கள் எங்களுக்கே அழுத்தங்களை உருவாக்கிக் கொண்டோம். எங்கு தவறு செய்தோம் என்பதற்கான விடையை தேடிக்கொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை