வைரலாகும் சூர்யகுமார் யாதவ் குறித்த ரோஹித்தின் பழைய ட்வீட்!
இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி, இன்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
முன்னதாக, டி 20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றிருந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, சற்று கடின இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், இங்கிலாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
ஆனால், இந்த போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், தனியாளாக ஏறக்குறைய கடைசி வரை நின்று போராடி, 117 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி தோல்வி அடைந்தாலும், 55 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 117 ரன்கள் எடுத்த சூர்யகுமாரின் அதிரடி போராட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதனால், இன்று ஆரம்பமாகும் ஒரு நாள் தொடரிலும் சூர்யகுமாரின் ஆட்டத்தைக் காண பலரும் ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில், சூர்யகுமார் குறித்து, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பகிர்ந்த ட்வீட் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக, கடந்த 2011 ஆம் ஆண்டு, ரோஹித் சர்மா செய்திருந்த ட்வீட்டில், "சென்னையில் பிசிசிஐ விருது வழங்கும் விழா நடந்து முடிந்தது. சில அருமையான வீரர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். மும்பையில் இருந்து சூர்யகுமார் யாதவ் என்ற வீரர் வருங்காலத்தில் சிறந்த வீரராக வருவார்" என அதில் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் கலக்கிய சூர்யகுமார் யாதவ், கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணிக்காகவும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.