நடுவரின் கேள்விக்காக தான் நான் அப்படி செய்தேன் - ரோஹித் சர்மா!

Updated: Sun, Oct 15 2023 12:29 IST
நடுவரின் கேள்விக்காக தான் நான் அப்படி செய்தேன் - ரோஹித் சர்மா! (Image Source: CricketNmore)

விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறிய பிறகு புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவும் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் வந்து அணியை கட்டமைத்ததற்கான முழுப் பலன் தற்பொழுது தெரிந்து கொண்டிருக்கிறது. இந்திய அணி தைரியமான இன்டென்ட்டை பேட்டிங்கில் கொண்டிருக்கவில்லை. மேலும் முதலில் பேட்டிங் செய்யும்பொழுது பெரிய இலக்கை எதிரணிக்கு வைப்பதற்கு இந்திய அணிக்கு தெளிவில்லாமல் இருக்கிறது என்று காரணம் முன் வைக்கப்பட்டது.

இதற்கு ரோஹித் சர்மா ராகுல் டிராவிட் ஜோடி சேர்ந்து, இனி எல்லா போட்டிகளையும் தைரியமாக அதிரடியாக ஆரம்பிப்பது என்கின்ற முடிவு செய்யப்பட்டது. மேலும் நல்ல ஆரம்பம் கிடைத்தால் எல்லா வீரர்களும் ஒரே மாதிரி அதிரடியாக விளையாடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. கேப்டனாக ரோஹித் சர்மா தானே முன் நின்று அதிரடியாக விளையாடுவது என்று, கேப்டன் பொறுமப்பை ஏற்றதில் இருந்து, அதே பாணியை பின்பற்றி வருகிறார். 

இதனால் அவரது ரன் சராசரி குறைந்திருக்கிறது ஆனால் அதே சமயத்தில் ஸ்ட்ரைக் ரேட் அதிகரித்து இருக்கிறது. தற்பொழுது இரண்டு ஆண்டு காலம் இவர்கள் அணிக்குள் உருவாக்கிய அணுகுமுறை தற்பொழுது நல்ல பலனை கொடுத்து வருகிறது. அணியின் வீரர்கள் அனைவருமே தாக்குதல் பாணியில் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.

நடப்பு உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரன் ஏதும் எடுக்காமல் ரோகித் சர்மா ஆட்டம் இழந்த போதிலும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் இந்த தொடரில் அதிரடியாக விளையாடு வரும் அவர் அதிக சிக்ஸர்கள் அடித்த சர்வதேச வீரர் என்கின்ற சாதனையை படித்திருக்கிறார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 300 சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.

இது மட்டும் இல்லாமல் உலகின் அதிவேக பந்துவீச்சாளரான பாகிஸ்தானின் ஹாரிஸ் ரவுப் பந்துவீச்சில் ஒரு போட்டியில் மூன்று சிக்ஸர்கள் விளாசிய ஒரே பேட்ஸ்மேனாக நேற்று ரோஹித் சர்மா சாதனை படைத்திருந்தார். அப்போது 90 மீட்டருக்கு ஒரு சிக்சரை ஹாரிஸ் ரவுஃப் பந்தில் அடித்தார். இந்த நேரத்தில் களத்தில் நடுவராக இருந்த எராஸ்மஸ் இடம் அவர் தன்னுடைய கையை மடக்கி பலத்தை காண்பிப்பது போல செய்தார். இது பார்ப்பதற்கு களத்தில் சுவாரசியமாக இருந்தது.

 

தற்பொழுது ஹர்திக் பாண்டியா இதுகுறித்து கேட்க அதற்கு பதில் அளித்துள்ள ரோஹித் சர்மா, “உன்னால் எப்படி இவ்வளவு பெரிய சிக்ஸர்கள் அடிக்க முடிகிறது? உன்னுடைய பேட்டில் ஏதாவது இருக்கிறதா? என்று அவர் கேட்டார். நான் அவரிடம் பேட் எல்லாம் கிடையாது, எல்லாம் என்னுடைய சக்தி என்று கூறினேன்” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை