இமாலய சிக்சரை பறக்கவிட்ட ரோவ்மன் பாவல்; உறைந்து நின்ற ஹொசைன் - வைரல் காணொளி!

Updated: Thu, Oct 20 2022 09:42 IST
Image Source: Google

டி20 உலகக் கோப்பை 2022 தொடரின் தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் குரூப் ஏ பிரிவு தகுதிச் சுற்று ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே அணிகள் மோதின. வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே அயர்லாந்து அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்திருந்ததால், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கட்டாயமாக வெற்றியை பெற்றாக வேண்டிய நிலையில் இருந்தது. தோற்றாலும் நாடு திரும்புவதை தவிர வேறு வழியே இல்லை.

இந்நிலையில் இப்போட்டிக்கான டாஸை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஓபனர் சார்லஸ் 45 ரன்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில் கைல் மேய்ர்ஸ் 13, எவின் லிவிஸ் 15, பூரன் 7, சமர்த் ப்ரூக்ஸ் 0, ஹால்டர் 4 போன்றவர்கள் படுமோசமாக சொதப்பி, நாடு திரும்புவதற்கான வேலையை சரியாக செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ரோவ்மன் பாவல் 28 ரன்களையும், அகில் ஹோசைன் 23 ரன்களைச் சேர்த்து நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 153/7 ரன்களை எடுத்தது.

பிட்ச் வேகத்திற்கு சாதகமாக இருந்ததால், ஜிம்பாப்வே அணி பேட்டர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதிகபட்சமாக லுக் ஜோங்வா 29 , மத்வீரே 27 ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டனர். மற்றவர்கள் சொதப்பியதால், ஜிம்பாப்வே அணி 18.2 ஓவர்களில் 122/10 ரன்களை மட்டும் சேர்த்து, 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் முஸரபானி வீசிய ஷார்ட் பாலை ரோவமன் பாவல் இமாலய சிக்ஸர் ஒன்றை விளாசினார். இதனைப் பார்த்த சக பேட்டர் அகில் ஹோசைன் தலையில் கையைவைத்து, பந்துபோன திசையை பார்த்து நின்றார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

வர்ணனையாளர்களும் பந்து சென்ற தூரத்தை பார்த்து வியந்தனர். அந்த பந்து 104 மீட்டர் சென்றாக அறிவிக்கப்பட்டது. அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை