ஐபிஎல் 2021: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sat, Sep 25 2021 21:02 IST
Royal Challengers Bangalore & Mumbai Indians, 39th IPL Match – Cricket Match Prediction, Fantasy XI
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 39ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ்
  • இடம் - துபாய் சர்வதேச மைதானம், துபாய்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

மும்பை இந்தியன்ஸ் அணி அமீரகத்தில் நடைபெற்ற இரண்டு போட்டியிலும் தோல்வியைச் சந்தித்துள்ளதால், நிச்சயம் இப்போட்டியில் வெற்றிபெறும் முனைப்பில் களமிறங்கவுள்ளது. 

மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், பொல்லார்ட் என அதிரடி வீரர்கள் இருந்தாலும், அவர்கள் தங்கள் திறனை இதுவரை வெளிப்படுத்தாததால், மும்பை அணியால் வெற்றியை பெற இயலவில்லை.

பந்துவீச்சைப் பொறுத்தவரை ட்ரெண்ட் போல்ட், ஆடம் மில்னே, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தங்கள் பணியைச் சிறப்பாக செய்துவருகின்றனர். அவர்களுடன் ராகுல் சஹார், குர்னால் பாண்டியாவும் சிறப்பாக செயல்பட்டால் அது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி, அமீரகத்தில் நடைபெற்ற இரண்டு போட்டியிலு, மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. அதிலும் கடந்த போட்டியில் விராட் கோலி சிறப்பான ஒரு தொடக்கத்தைக் கொடுத்தார். 

இருப்பினும் மற்ற வீரர்கள் சரிவர சோபிக்காததால், அந்த அணியால் ரன்களை குவிக்க முடியவில்லை. இதனால் நாளைய போட்டியில் அவர்கள் நிச்சயம் தங்கள் திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதேசமயம் பந்துவீச்சில் ஹர்சல் படேல், கைல் ஜேமிசன், யுஸ்வேந்திர சஹால் அணிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 28
  • ஆர்சிபி வெற்றி - 11
  • மும்பை இந்தியன்ஸ் வெற்றி - 17

உத்தேச அணி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - விராட் கோலி (கே), தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பாரத், கிளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், டிம் டேவிட், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல்.

மும்பை இந்தியன்ஸ் - குயின்டன் டி காக், ரோஹித் சர்மா (கே), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சவுரப் திவாரி, கீரான் பொல்லார்ட், குர்னால் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக், ஏபி டிவில்லியர்ஸ்
  • மட்டைகள் - தேவத்த் படிக்கல், விராட் கோலி, ரோஹித் சர்மா
  • ஆல் -ரவுண்டர்கள் - கீரான் பொல்லார்ட், கிளென் மேக்ஸ்வெல்
  • பந்து வீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா, ராகுல் சாஹர், யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் பட்டேல்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை