ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

Advertisement

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

போட்டி முன்னோட்டம் 

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

அதிலும் தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பரத், கிளென் மேக்ஸ்வெல் என அதிரடி ஆட்டத்தில் மிரட்டி வருவது அணிக்கு கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளது. அதேபோல் பந்துவீச்சில் ஹர்ஷல் படேல், சஹால், சிராஜ் என அசத்தி வருவதால் நிச்சயம் இப்போட்டியில் ஆர்சிபி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

அதேபோல் ஈயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நூழிலையில் பிளே ஆஃப் வாய்ப்பைப் பெற்றுள்ளது. ஆனாலும் அந்த அணி நடப்பு சீசனில் மும்பை, பெங்களூரு என பலம் வாய்ந்த அணிகளையும் வீழ்த்திய உற்சாகத்துடன் வலம் வருகிறது. 

Advertisement

கேகேஆர் அணியில் சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதீஷ் ராண ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விளையாடிவருவதால் அணிக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது. பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி, ஃபர்குசன், சுனில் நரைன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவதும் அணியின் வெற்றி வாய்ப்பை உறுதிசெய்கிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள்- 28
  • பெங்களூரு வெற்றி - 13
  • கொல்கத்தா வெற்றி - 15

உத்தேச அணி 

Advertisement

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - விராட் கோலி (கே), தேவதூத் படிக்கல், ஸ்ரீகர் பாரத், டேனியல் கிறிஸ்டியன், கிளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் பட்டேல், ஜார்ஜ் கார்டன், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, இயோன் மோர்கன் (கே), தினேஷ் கார்த்திக், ஷாகிப் அல் ஹசன், சுனில் நரைன், லோக்கி ஃபர்குசன், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள்-கோனா ஸ்ரீகர்-பாரத்
  • பேட்டர்ஸ் - ஏபி டிவில்லியர்ஸ், விராட் கோலி, ராகுல் திரிபாதி
  • ஆல் -ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், ஷாகிப் அல் ஹசன், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர்
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் பட்டேல், வருண் சக்கரவர்த்தி

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News